Header Ads



அரச அலுவலகங்களில் தனது படத்தை தொங்கவிட முஹம்மது முர்ஸி தடை விதித்தார்

எகிப்தின் புதிய ஜனாதிபதி மொஹமட் முர்சி தனது புகைப்படத்தை அரச அலுவலகங்கள் மற்றும் அமைச்சகங்களில் தொங்கவிடுவதற்கு தடைவிதித்துள்ளார்.

“எகிப்தையே முன்னிலைப்படுத்த வேண்டுமே ஒழிய ஜனாதிபதியை அல்ல என்று புதிய ஜனாதிபதி விரும்புகிறார். ஏனெனில் மனிதர் இறக்கக் கூடியவர்கள். எகிப்து நிரந்தரமாக இருக்கும்” என்று புதிய ஜனாதிபதி மொஹமட் முர்சியின் ஊடக பேச்சாளர் யாசிர் அலி அல் அப்தல் ஊடக மாநாடொன்றை கூட்டி இந்த அறிவிப்பை வெளியிட்டார்.

அதேபோன்று ஜனாதிபதி பதவியேற்ற பின் வாழ்த்துத் தெரிவித்து விளம்பரங் களை வழங்க வேண்டாம் என பொது மக்கள் மற்றும் நிறுவனங்களுக்கு முர்சி வேண்டுகோள் விடுத்துள்ளார். இவ்வாறான செயல் பணத்தை வீண் விரயம் செய்வது என்றும் நாட்டுக்கு நல்லது செய்ய அந்த பணத்தை பயன்படுத்துமாறும் அவர் கோரியுள்ளார்.

4 comments:

  1. அல்ஹம்துலில்லாஹ்.நல்ல முன் மாதிரி.சகல விடயங்களிலும் தேவையற்றவைகளை தவிர்த்து வந்தால்
    ,நாட்டுக்கும்,அவரின் ஆட்சிக்கும் நல்லதே நடக்கும்.அல்லாஹ் அக்பர்.
    Meraan

    ReplyDelete
  2. Maasha Allah!
    இப்படி நம்ம நாட்டில எப்ப நடக்கும்?(ரஸ்மி)

    ReplyDelete
  3. good example for all.

    ReplyDelete
  4. good example for all.

    ReplyDelete

Powered by Blogger.