Header Ads



மது உற்பத்தி செய்யப்பட்ட இடத்தில்தான் அலரிமாளிகை அமைந்துள்ளது

ஒல்லாந்தர் காலத்தில் மது உற்பத்தி செய்யப்பட்ட இடத்திலேயே தற்போது அலரிமாளிகை அமைந்துள்ளதால் இலங்கையில் ஒருபோதுமே மதுவுக்கு முற்றுப்புள்ளி வைக்க முடியாதென ஐ.தே.க. எம்.பி. தயாசிறி ஜயசேகர தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற உற்பத்தி வரிகள் கட்டளைச்  சட்டத்தின் கீழான ஒழுங்கு விதிகள் மீதான விவாதத்தில் உறையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் கூறியதாவது.

இந்த அரசினால் மதுவுக்கு முற்றுப்புள்ளித் திட்டம் ஆரம்பிக்கப்பட்ட போதும் மாதா மாதம் மதுபானசாலைகளின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே செல்கின்றது.  கண்ட கண்ட இடங்களில் எல்லாம் பியர் குடிப்பதற்கான இடங்கள் ஸ்தாபிக்கப்படுகின்றன. காலையில் மதுவுக்கு முற்றுப்புள்ளிவைக்க வேண்டுமெனக் கூறும் இத்திட்டத்தை ஆரம்பித்தோர் இரவில் மூக்கு முட்டக் குடிக்கிறார்கள். ஒல்லாந்தர் காலத்தில் மது உற்பத்தி இடமாகவிருந்த இடத்திலேயே தற்போது அலரிமாளிகை உள்ளது.

இவ்வாறான நிலையில் இந்த மாளிகையில் இருப்போரால் எப்படி மதுவுக்கு முற்றுப்புள்ளி வைக்க முடியும்?

இன்று பங்குச் சந்தை வீழ்ச்சியடைந்து வருகின்றது. இந்தியா, பங்களாதேஷ், நேபாளம் போன்ற நாடுகளில் பங்குச் சந்தை வீழ்ச்சியுறும் போது அந்நாட்டு அரசாங்கங்கள் அதனை பாதுகாத்து மீண்டும் கட்டியெழுப்பும் ஆனால் எமது நாட்டில் அரசு அதில் தலையிட்டு மேலும் வீழ்ச்சியடைய வைக்கும் இங்கு பங்குச் சந்தைக்கு நிலையான பணிப்பாளர் கிடையாது.

இலங்கையில் வட்டி வீதம் நூற்றுக்கு 14 ஆக இருக்கும் போது முதலீட்டாளர்கள் எவ்வாறு தமது முதலீடுகளை செய்வார்கள் ரூபாவின் மதிப்பை அரசாங்கம் பாதுகாத்துக் கொள்ள முடியவில்லை இதனால் நாட்டு மக்களே நெருக்கடிக்கு முகம் கொடுத்துள்ளனர்.

1 comment:

Powered by Blogger.