காதினுள் முட்டையிடும் பூச்சி - இலங்கையில் கண்டுபிடிப்பு - தொலைபேசிதான் காரணமா..?
சுற்றாடலிலுள்ள தூசிகளில் காணப்படும் ஹவுஸ் டஸ்ட் மைட்டா (Dermatophagoides pteronyssimas) என்ற நுண்ணுயிர் மனிதனின் காதினுள் முட்டையிட்டு குஞ்சுகளுடன் வாழ்ந்திருப்பது முதற் தடவையாக இலங்கையில் கண்டறியப் பட்டிருக்கின்றது.
இந்த பூச்சிக்கள் தொலைபேசி பாவனையினால் பரவுவதாக சுகாதார ஆராய்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்தின் பணிப்பாளர் டொக்டர் அனில் சமரநாயக்கா குறிப்பிடுகையில், களுத்துறை, பிரதேசத்தைச் சேர்ந்த 48 வயது மதிக்கத் தக்க நபர் ஒருவர் காது தொடர்பான சிகிச்சைக்காக காது, மூக்கு, தொண்டை தொடர்பான மருத்துவ நிபுணரை அணுகியுள்ளார்.
இந்த சந்தர்ப்பத்தில் அந்நபரின் காதினுள் இருந்து மா போன்ற துகள்கள் பெறப்பட்டுள்ளன. பரிசோதனைக்காக இத்துகள்கள் எமக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அதனை எமது நிலையத்தின் ஒட்டுண்ணியல் பிரிவு தலைவி டொக்டர் சாகரிகா சமரசிங்க தலைமையிலான குழுவினர் ஆய்வு செய்தனர்.
இச்சமயமே இந்த ஹவுஸ் டஸ்ட் மைட்டா என்ற இந்த நுண்ணுயிர்கள் குறித்த நபரின் காதினுள் முட்டையிட்டு குஞ்சுகளுடன் வாழ்ந்திருப்பது முதற் தடவையாகக் கண்டறியப்பட்டிருக்கின்றது.
இந்த நுண்ணுயிர் தொடர்பாக அச்சமடையத் தேவையில்லை என்றாலும் சுற்றாடலிலுள்ள தூசியில் காணப்படும் நுண்ணுயிர் மனித அவயங்களில் வாழ்வது குறித்து மிக விழிப்பாக இருப்பது அவசியம் என்றார்.
எவ்வாறாயினும், பிரித்தானிய தொலைத்தொடர்பு ஆராய்வாளர்களின் தகவல்படி, மலசல கூடங்களின் ஊடாக கிரிமிகள் பரவுவதை காட்டிலும், தொலைபேசிகளில் 18 மடங்கு அதிகமாக கிரிமிகள் பரவுவதாக தெரிவிக்கப்படுகிறது.
Post a Comment