சவூதி அரேபியாவிலுள்ள இலங்கைத் தூதரக அதிகாரி இலஞ்சம் வாங்குகிறார்..?
சவூதி அரேபியாவிலுள்ள இலங்கைத் தூதரக அதிகாரிகள் சிலர் இலஞ்சம் வாங்கும் அசிங்கமான செயல்களில் ஈடுபட்டுவருவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
சவூதி அரேபியாவிலிருந்து எமது இணையத்துடன் தொடர்புகொண்ட மொஹமட் நாஸீர் என்ற சகோதரரே இவ்வாறு பகிரங்கமாக குற்றம் சுமத்தினார். இதுகுறித்து அவர் மேலும் தகவல் தருகையில்,
சவூதி அரேபியாவிலுள்ள இலங்கை தூதரகத்தில் பணியாற்றும் சுஜீவ என்பவர் என்னிடம் இலஞ்மாக 500 றியால்களை பெற்றுக்கொண்டார். அவரிடம் ஒரு கையொப்பம் பெறுவதற்காகவே இவ்வாறு சுஜீவ என்பவரிடம் 500 றியால்களை கொடுத்தேன்.
மேலும் முஸ்லிம்கள் விடயத்தில் திட்டமிட்ட வகையில் பாரபட்சத்துடன் செயற்படும் இந்த சுஜீவ என்பவரின் செயற்பாடுகள் தூதுவர் ஜவாட் அறிந்திருக்க வாய்ப்பில்லை. இதுகுறித்து இன்னும் சில தூதரக அதிகாரிகள் அறிந்திருக்கிறார்கள்.
சுஜீவ என்பவரின் இவ்வாறான செயற்பாடுகளை தட்டிக்கேட்டால், உயர் அரசியல் வாதிகளுடன் தனக்கு தொடர்பிருப்பதாகவும். தன்னை எவரும் தட்டிக்கேட்க முடியாதெனவும், மரியாதை குறைவான வார்த்தைகளுடன் பேசுவதாகவும், இதுகுறித்து உடனடியாக அரசாங்கம் உடனடிக் கவனம் செலுத்த வேண்டுமென்பதே சவூதி அரேபியாவிலுள்ள இலங்கை முஸ்லிம்களின் விருப்பமாகுமெனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
அத்துடன் சவூதி அரேபியாவிலுள்ள இலங்கைத் தூதரகத்திற்கு தமது தேவைகளை நிறைவேற்றச் செல்பவர்களுக்கு உரிய வசதிகள் செய்துகொடுக்கப்படுவதில்லை எனவும், இதனால் அவர்கள் தூதரகத்திற்கு வெளியே கொடும் வெய்யலில் காத்திருக்கவேண்டியிருப்பதாகவும், மற்றும் சிலர் தமது தேவைகளை நிறைவேற்றிக்கொள்வதற்காக வெளியே படுத்துறங்கும் நிலை ஏற்படுவுதாகவும் அவர் மேலும் கூறினார்.
எமது குறிப்பு - இந்த குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் சவூதி அரேபியாவிலுள்ள இலங்கை தூதரகத்தை எமது இணையம் தொடர்புகொள்ள முயன்றபோதும் அது பயனளிக்கவில்லை.
enkada kasa vaanke enkakittaye appau itha than sollurathu sontha selavula suniyam vaikkirathu enru....intha panam ellam pirahu orukalathula sword aaha mari enkalaiye kutthum athala enna syanum endu ellarukkum theriyanum
ReplyDeleteஅஸ்ஸலாமு அலைக்கும்.....
ReplyDeleteJaffna Muslim வாசகர்களே..
இந்த குறிப்பிடப்பட்டுள்ள விடயம் தொடர்பாக Srilankan Embassy யுடன் அதிகமான தொடர்பினை கொண்டிருப்பவன் எனும் காரணத்தினால் இந்த விடயம் பற்றி எனது கருத்தையும் சொல்ல விரும்புகிறேன்.....
இங்கு குறிபிடப்பட்டுள்ள விடயமானது ஒரு ஆதாரம் அற்றதாகும்.... எமது நாட்டில் இருந்து மத்திய கிழக்கு நாடுகளுக்கு வேலைக்கு வருபவர்களின் மனோ நிலை என்னவென்றால் ..... அவர்கள் எதை சொன்னாலும் Embassy Representative நம்பவேண்டும் என்பதேயாகும்..
இங்கு குறிப்பிடப்பட்டுள்ள Sujewa என்னும் அதிகாரி மிகவும் கடுமையான ஒருவர் என்பதை பல தடவைகள் நேரில் நடந்த சம்பவங்களை வைத்து அறிந்திருக்கிறேன்.உண்மையில் யாருக்கும் பயப்படாத ஒரு சிறந்த அதிகாரி.யார் பக்கம் நியாயம் உள்ளதோ அவருக்காக உறுதியாக பேசக்கூடியவர்.
அவர் சவுதி அரேபியர்களுக்கும் அஞ்சுவதில்லை...
அடுத்து முஸ்லிம்களிடம் பாரபட்சம் காட்டுவதாக அந்த சகோதரர் சுட்டிக்காட்டி இருக்கிறார்...இதுவும் மிகவும் முட்டாள்தனமான கருத்து..இதுபோன்ற தவறான கருத்துக்களை பரப்பி ஒரு நியாயமான நேர்மையான அதிகாரியை திசை திருப்பி தேவையற்ற குழப்பங்களை உருவாக்க வேண்டாம் என்பதையும் இங்கு சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.
அவர் எதற்காக குறித்த அதிகாரியிடம் கையொப்பம் பெற சென்றார் என்பதை மறைக்காமல் சொல்ல சொல்லுங்கள்.... அப்புறம் புரியும் இந்த Mohamad Naseer பற்றி.
நன்றி..
முபாரக்
தயவு செய்து யாராக இருந்தாலும் வீண் பழி சுமத்த வேண்டாம்....இஸ்லாம் இதனை வெறுக்கின்றது.....மற்ற மதத்தவர்களுக்கு நாம் முன்மாதிரியாக இருக்க வேண்டும் ...
ReplyDeleteNow a days you must have in access smart phones please meet speak and record it publish it on you tube
ReplyDeleteதீர்க்கமாக விசாரித்தால் உண்மை அம்பலத்துக்கு வரும்.
ReplyDelete