Header Ads



மஹிந்த தலைமையில் நேற்று முக்கிய கூட்டம் - கிழக்கு மாகாண சபை இன்று கலைக்கப்படலாம்..?

வட மத்திய மாகாண சபை இன்று புதன்கிழமை நள்ளிரவு கலைக்கப்படும் என அரசாங்கத் தகவல்கள் தெரிவிக்கின்றன. பதவி காலம் முடிவதற்கு முன்னரே இம்மாகாண சபை கலைக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது. இதேவேளை, கிழக்கு மற்றும் சப்ரகமுவ மாகாண சபைகளும் இன்று அல்லது நாளை கலைக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த மூன்று மாகாணசபைகளினதும் முதல்வர்களின் ஆலோசனைக்கமைய, ஆளுனர்கள் இதற்கான ஆவணங்களில் ஒப்பமிடவுள்ளனர்.

மகிந்த ராஜபக்ச தலைமையில் அலரி மாளிகையில் நேற்று இடம்பெற்ற கூட்டம் ஒன்றிலேயே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக கொழும்பு ஆங்கில நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது

No comments

Powered by Blogger.