Header Ads



எதனை நம்பி தமிழர்களுடன் இணைந்து முஸ்லிம்கள் போராடுவது..?


தமிழர் போராட்டத்தில் பங்களிக்காது தீர்வில் முஸ்லிம்கள் பங்கு கோருவது நியாயமற்றது என்ற ஜனநாயக மக்கள் முன்னணியன் தலைவர் மனோ கனேசனின் வார்த்தை மேலாதிக்க சிந்தனையின் வெளிப்பாடாகும் என உலமா கட்சித்தலைவர் முபாறக்  அப்துல் மஜீத் தெரிவித்துள்ளர். அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,

நமது நாட்டின் தேசிய இனப்பிரச்சினையின் பரிணாமம் மற்றும் தமிழ் மக்களின் எதிர் பார்ப்புக்கள் எவை, முஸ்லிம் மக்களின் பிரச்சினைகள் எவை அவற்றுக்காக அவர்கள் வேண்டி நிற்கும் தீர்வுகள் என்ன என்ற எதனையும் புரிந்து கொள்ளாமல்  மனோகனேசன் பத்திரிகை எதனையும் படிக்காத ஒரு சராசரி பொதுமகன் போன்று கருத்துத்தெரிவித்துள்ளமை கவலைக்குரியதாகும்.

முஸ்லிம்கள் ஒரு போதும் தமிழர்களுக்கு மட்டுமுரிய போராட்டத்திற்கு தடையாக இருந்ததில்லை. ஒரு காலத்தில் தமிழர்கள் தமக்காகவுமே போராடுகிறார்கள் எனநினைத்து அவர்களுடன் இணைந்து தமது உயிர்களையும் உடமைகளையும் தியாகம் செய்து பின்னர் தமிழ் போராளிகளாலேயே முஸ்லிம்கள் கருவறுக்கப்பட்ட வரலாறு என்பது புராதண வரலாறு அல்ல மாறாக நவீன வரலாறாகும்.

இந்த வரலாற்று பின்னணிகள் புரியாமல் கத்துவதில் எந்த நன்மையும் விழையப்போவதில்லை. தமிழர்களுக்கான தீர்வில் முஸ்லிம்கள் எந்தவொரு பங்கையும்  கேட்கவில்லை என்பதை மனோ கனேசன் போன்றோர் முதலில் தெரிந்து கொள்ள வேண்டும். மாறாக, முஸ்லிம்களின் தாயகத்தை அதாவது முஸ்லிம் சமூகத்தையும் அவர்களின் வாழ்விடங்கள் மற்றும் நில புலங்களை தமிழர்களுக்கு வழங்கும் தீர்வுத்திட்டத்துக்குள் உள்ளடக்கி விட வேண்டாம் என்பதுதான் முஸ்லிம் மக்களின் கோரிக்கையாகும். இந்த உண்மையை பகிரங்கமாக எடுத்துச்சொல்ல பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் முஸ்லிம் கட்சிகள் என சொல்வோர் அச்சப்பட்டாலும் நாம் இவற்றை  1990 களில் இருந்தே பகிரங்கமாக எழுதி வருகிறோம்.

வடக்கு கிழக்கு முஸ்லிம்கள் தமது வாழ்விடங்களுக்கும், உரிர்களுக்குமான அச்சுறுத்தலை முதலில் எதிர் நோக்கியது சிங்கள பேரினவாதத்தினால் அல்ல, மாறக தமிழர் மேலாதிக்கம் காரணமாகவே என்பது புரியப்பட வேண்டும். சிங்கள பேரினவாதம் காரணமாக முஸ்லிம் சமூகம் இழந்ததை விட தமழ் பேரினவாதத்தினாலேயே முஸ்லிம்கள் அதிகம் இழந்தள்ளார்கள்.

வடக்கிலும் மட்டக்களப்பிலும் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள முஸ்லிம்களின் பல்லாயிரக்கனக்கான காணிகள் இன்னமும் மீள கையளிக்கப்படவில்லை என்பதுடன் அவர்கள் சுதந்திரமாக மீள குடியேறவும் முடியாமல் உள்ள சூழ் நிலையில் இதற்காக மனோ கனேசன் போன்றோர் எத்தகைய அழுத்தங்களையும் தமிழ் மக்களுக்கு கொடுக்காத நிலையில் இவற்றை மீளப்பெற சிங்கள அரசாங்கத்தையே முஸ்லிம்கள் நம்பிக்கொண்டிருக்க வேண்டிய துரதிஷ்டமான நிலையில் எவ்வாறு தமிழர்களின் போராட்டத்துக்கு முஸ்லிம்கள் ஒத்துழைக்க முடியும் என்று கேட்கிறோம்.

தமிழ் மக்களுக்கு தனிஈழமே வழங்கப்பட்டாலும் அதற்கு முஸ்லிம்கள் தடையில்லை. ஆனால் அதற்குள்  முஸ்லிம்களின் தாயகம் உள்ளடக்கப்படக்கூடாது என்பதுதான் முஸ்லிம்களின் உறுதியான கோரிக்கையாகும். ஒன்றில் முஸ்லிம்களின் தாயகம் சிங்கள அரசுடன் இணைந்திருக்க வேண்டும். அல்லது ஐக்கிய இலங்கைக்குள் முஸ்லிம்களுக்கான தனியான நிர்வாகம் வழங்கப்பட வேண்டும் என்பதே எமது கோரிக்கையாகும்.

சிங்கள பேரினவாதத்தினால் தமிழ் மக்களும் முஸ்லிம் மக்களும் பாரிய இன்னல்களை எதிர் நோக்கும் இன்றைய நிலையிலும் முஸ்லிம்களுக்கு வடக்கிற்கு தனியாகவும் கிழக்கற்கு தனியாகவும் நிர்வாக அலகுகளை வழங்க நாம் தயார் என எந்தவொரு தமிழ் கட்சியும் பகிரங்கமாக சொல்ல முன்வராத நிலையில் எதனை நம்பி தமிழர்களுடன் இணைந்து முஸ்லிம்கள் போராடுவது என மனோ கனேசன் சொல்வாரா?

ஆகவே அதிகாரப்பகிர்வு எனும் போது முஸ்லிம்களுக்கு தனியான நிர்வாக அதிகார பிரிவு, மற்றும் வடக்கு கிழக்கில் தமிழர்களால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள காணிகள் மீளக்கையளிப்பு போன்றவற்றுக்கு முதலில் தமிழ் கட்சிகளிடமிருந்து பகிரங்க உத்தரவாதமும் தீர்வும் கிடைக்காத வரை முஸ்லிம் சமூகம் தமிழ் மக்களின் பிரச்சினைக்காக இணைந்து போராடுவது பற்றி பேசுவது தற்போதைக்கு அர்த்தமற்றதாகும் என்பதை உலமா கட்சி தெளிவாக சொல்லிக்கொள்கிறது.

10 comments:

  1. இலங்கை என்பது இரண்டு நாடு ஓன்று ஈழம் மற்றும் சிலோன் .
    ஈழம் என்பது வடக்கு கிழக்கு இணைந்த தமிழர் தாயகம். சிலோன் என்பது சிங்கள தேசம் .
    இதில் வேறு யாருக்கும் இடம் இல்லை. .. வியாபார நோக்கத்துக்கு இங்கு வந்து இடங்களை பிடித்து இப்போது எதோ எதோ பேசுவது ஆர்த்தமற்றது. மனோ கூறியது முற்றிலும் உண்மை.. முஸ்லிம்களின் அவர்களுக்கே உரிய சந்தர்ப்பவாதத்தை தோலுரித்து காட்டி இருக்கிறார்.
    இவருக்கும் பிக்கும் எதுவித வித்தியாசமும் இல்லை.
    தமிழர் தாயகம் . சிங்கள தேசம் இரண்டு மட்டும் இங்கு இருக்கிறது. அதை உறுதியாக நாங்களும் சொல்லிக்கொள்ள விரும்புகிறோம்.

    ReplyDelete
  2. aama idha solli solliye thaan ivalavu naala seen katuriga poya porathukku loosu payale

    ReplyDelete
  3. தமிழர் தாயகம் என்பது இருந்ததும் இல்லை. இருக்கப் போவதும் இல்லை.

    முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா அம்மையாரும் தமிழர்கள் வந்தேறு குடிகள் என்று ஒருமுறை தென்னாபிரிக்காவில் வைத்து சொன்னார்.

    முன்னாள் நீதிபதி விக்னேஸ்வரன் என்பவர், தமிழர்கள் சோழ அரசனால் இலங்கைக்குத் துரத்தப்பட்ட பரதேசிக்கூட்டம் என சிங்களவர்கள் சொல்வதாக ஒருமுறை வெள்ளவத்தையில் கூட்டமொன்றில் புலம்பியுள்ளார்.

    இலங்கைக்கு எந்த இனமும் சொந்தம் கொண்டாடக் கூடாது. இது எல்லா இனங்களுக்கும் சொந்தம். எல்லா இன மக்களும் வந்தேறு குடிகள். இதுதான் உண்மை.

    வட, கிழக்கு தமிழர் தாயகம் என அடிக்கடி புலம்புவது, ஒரு கேலிக்கூத்து.

    ReplyDelete
  4. வரலாறு தெரியாத மந்தை கருத்தவே நான் இதை பார்கிறேன்.
    ஈழம் என்பது தமிழர்கள் தாயகம் அது வரலாற்றில் இருந்து இருக்கிறது . இருந்துகொண்டு இருக்கிறது . இனியும் இருக்கும்.
    வரலாறே இல்லாத நீங்கள் பேசுவது தான் இங்கு வேடிக்கை. முஸ்லிம் தாயகம் என்று புதிதாக வியாபார வந்தேறிகள் சொல்லுவதை விட கேலி குத்து ஏதும் இல்லை.
    அதே அரசும் ராணுவ தளபதி முதல் முஸ்லிம் இந்த நாட்டின் வியாபார நோக்கத்துக்கு வந்து சிங்கள மற்றும் தமிழ் பெண்களை திருமணம் செய்தவர்கள் அவர்கள் சவுதி நாட்டுக்கு செல்லுங்க என்று தெருவில் வைத்து சொன்னதையும் நானும் நினைத்து பார்கிறேன்.
    புலம்புவது நாங்கள் இல்லை. எப்போதோமே அடுத்தவருக்கு குனியாத மனதொட ..சுதந்திரமாக வாழ நினைப்பவர்கள் நாங்கள். உங்களை திடீர் மழையில் முளைத்த காலன் அல்ல எங்கள் வரலாறு. மிக நிண்டது.

    ReplyDelete
  5. ungal eeel(n)ana kanawu niraiwera , allhana padiwu;

    ReplyDelete
  6. இலங்கை முஸ்லிம்களின் வரலாறு என்பது இலட்சக் கணக்கான வருடங்களைக் கொண்டதே அல்லாமல் அவர்கள் அனைவரும் அறபு மக்களின் வாரிசுகள் என்பது அப்பட்டமான கற்பனையாகும் என உலமா கட்சித் தலைவர் மௌலவி முபாறக் அப்துல் மஜீத் குறிப்பிட்டுள்ளார்.

    இனாமலுவே சுமங்கள தேரரின் முஸ்லிம்கள் பற்றிய தவறான அண்மைய கருத்துக்கள் பற்றிய கேள்விக்கு பதிலளிக்கையிலேயே முபாறக் மௌலவி இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவித்ததாவது;

    “இலங்கையை பொறுத்த வரை சிங்களவர்களின் வரலாறு என்பது சுமார் 2500 வருடங்களுக்கு முன்பே ஆரம்பமாவதாக சிங்கள மக்களின் வரலாற்றுக்குரிய ஆதாரபூர்வ நூலான மஹாவம்சம் கூறுகிறது. அத்துடன் இந்தியாவிலிருந்து நாடு கடத்தப்பட்டு வந்த விஜயன் ஒரு பௌத்தனாக வரவில்லை. ஏனெனில் விஜயனின் வரவிற்கு பின்பே இலங்கைக்கு பௌத்த மதம் வந்ததாக மஹாவம்சம் கூறுகிறது.

    ஆனால் விஜயனின் வரவுக்கு முன்பிருந்தே இலங்கையில் முஸ்லிம்கள் வாழ்ந்தார்கள். விஜயன் மணமுடித்த குவேணி ஒரு பௌத்த பெண்ணாகவோ அல்லது இந்துவாக வாழ்ந்ததாகவோ ஆதாரம் இல்லை. இந்த நிலையில் மனித வரலாற்றை ஆராயும் போது முதல் மனிதன் ஆதம் இலங்கையில் கால் பதித்ததாகவே சமயங்களும் மானுட வரலாறும் தெளிவாக கூறுகின்றது.

    அதேபோல் ஆதம் ஒரு முஸ்லிமாக வாழ்ந்ததாக குர்ஆன் மிகத் தெளிவாக கூறுகிறது. சிங்களவர்களுக்கு எவ்வாறு மஹாவம்சம் ஆதார நூலோ அதேபோல் சில வேளை அதனை விடவும் குர்ஆன் முஸ்லிம்களின் ஆதார நூலாக முஸ்லிம்களால் கொள்ளப்படுகிறது.

    ஆதத்தின் வரலாறு என்பது சுமார் நாற்பது லட்சம் வருடங்களுக்கு முந்தையது என இன்றைய விஞ்ஞானம் உறுதியாக கூறுகிறது. அந்த வகையில் ஆதத்தின் பரம்பரையான முஸ்லிம் சமூகம் இலங்கையில் பல லட்சக்கணக்கான வருடங்களாக வாழ்ந்து வருகிறது என்பதே உண்மையாகும்.

    ReplyDelete
  7. Varalaaru varalaaru endu solliyea naasama ponga!!!!!! Varalaaru mattum than neendathu!!

    ReplyDelete
  8. மற்றவர்களின் கருத்துக்களை மதியாமல் மந்தையாகவே 30 வருட காலமாகப் பழகிவிட்ட செம்மறிக் கூட்டத்திற்கு எந்தக் கருத்துக்களும் எடுபடாது. யார் சொன்னாலும் கேட்கமாட்டார்கள். அதனால்தான் என்னவோ, இன்னமும் வெளிநாடுகளில் தெருவெல்லாம் செம்மறிபோல் கத்துகிறார்கள்.

    சும்மா சொல்லக் கூடாது, சில முன்னைய செம்மறிக் கூட்டங்களும் தற்போது மகிந்தாவின் குசினிப்பக்கம் போய், தமிழினத்தை விற்பவர்களும் இருக்கிறார்கள்.

    இலங்கை நாட்டில் தமிழினம் வருவதற்கு முன், இலங்கையில் இருந்தது ஒரே ஓரினம். அதுதான் சோனகர் இனம். அப்போது அந்த இனம் முஸ்லிம்களாக இருக்கவில்லை.

    ReplyDelete
  9. Tamilan enum mamathai thaan intha alavu keeltharamaana uyir pichchai keddu sinkalavanin kaalil vilunthu unkal penkalayum vithavaikalaakki unkal pen kulanthaikalayum kaamappasikku irayaakki ippo veli naadukali paaththiram eenthiyum thirudduth tholilum seythu veera vasanm pesum selavu kuuda marravaridam kappam vaaankiya panam tmilaa...

    Onrai maddum karrukkol un paarathiyaarin kavikalai paaru marra mathaththayum marravar kalin nilam soththayum mathiththu nada..

    Athu ennadaa arasaankam avan arasa kaaniyil eethaavathu seythaal athu un kaani athu ennadaa Eeelam ithu kedduthaanadaa ivvalavu naasamum unakku ippovaavathu puriyadaa ilankai oru naadu oru pass port oru kaasu oru vimaanam oru air port

    arasu tharuvathu marunthu unavu tholil summaa kanavu kande adi vaanki saavureerkalee

    Ini melum Muslimkalai parri ethaavathu kathaikkumunnar unnaal ilankaikku vara mudiyumaa vaa paarkkalaam

    ReplyDelete
  10. முபாறக் மௌலவி

    சோனகர்கள் முஸ்லிம்களாகவே இலங்கையில் வாழ்ந்தார்கள். அவர்கள் ஆதம் நபி வாரிசுகள். அதாவது ஆதி வாசிகள். சுமார் 5000 வருடங்களுக்கு முன் உலகில் வாழ்ந்த ஏப்ரஹாம் (இப்றாஹீம் அலை) ஒரு முஸ்லிமாகவே வாழ்ந்ததாக குர்ஆன் கூறுகிறது. அத்துடன் உலகில் பிறக்கும் ஒவ்வொரு குழந்தையும் முஸ்லிமாகவே பிறப்பதாகவும் அவர்களின் பெற்றோரே வேறு மதத்தவராக மாற்றுவதாக ஹதீதில் தெளிவாக வருகிறது. இந்த வகையில் இந்து மதம், கிறிஸ்தவ, ய+த, பௌத்த மதத்துக்கு முற்பட்ட முதல் மதம் இஸ்லாம் என்பதால் இலங்கையில் இந்துக்களும், பௌத்தர்களும் வருவதற்கு முன்பே இங்கு வாழ்ந்த மக்கள் முஸ்லிம்களாகவே வாழ்ந்தனர் என்பதே சரியான வரலாறு. இதில் முஸ்லிம்கள் கொஞ்சமும் சந்தேகிக்கத்தேவையில்லை.

    ReplyDelete

Powered by Blogger.