எகிப்தின் ஜனாதிபதிக்கு அமைச்சர் றிசாத் பதியுதீன் வாழ்த்துச் செய்தி
இர்ஷாத் றஹ்மத்துல்லா
தற்போது எகிப்து நாட்டின் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ள நீதிக்கும் சுதந்திரத்திற்குமான கட்சியின் தலைவர் கலாநிதி முர்ஸியின் தெரிவானது முழு முஸ்லிம் நாடுகளுக்கும் பலம் சேர்க்கும் ஒன்றாக அமையுமென அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும்இஅமைச்சருமான றிசாத் பதியுதீன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளார்.
புதிய ஜனாதிபதியாக தெரிவான முர்ஸிக்கு எழுதியுள்ள கடிதத்தில் இந்த விடயத்தை சுட்டிக்காட்டியுள்ளார். .எகிப்திய புரட்சி முடிவடைந்து ஒரு வருடத்திற்கும் மேற்பட்ட காலம் கழிந்த நிலையில் இடம் பெற்ற தேர்தலில் இஹ்வான்களின் நீதிக்கும் சு்தந்திரத்திற்குமான கட்சியின் தலைவர் கலாநிதி முர்ஸி ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டமைக்கு இலங்கையில் வாழும் இஸ்லாமியர்கள் தமது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர். இலங்கை அரசாங்கத்தில் சிறுபான்மை முஸ்லிம்களை பிரதி நிதித்துவப்படுததும் அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் தமது வாழத்துக்களை தங்களுக்கு தெரிவித்துக் கொள்கின்றது.
தங்களது தெரிவானது இஸ்லாமிய எதிர் சிந்தனை சக்திகளுக்கு பெரும் அச்சத்தை தோற்றுவித்துள்ளது.அதே போல் எகிப்திய மக்கள் தமது நியாயமான ஆட்சியினை சுதந்திரமாக அனுபவிப்பதற்கும் வழியினையேற்படுத்தியுள்ளது.குறிப்பாக மோசடிகளுக்கும்இஊழல்களுக்கும் எதிராக ஆட்சியாளர்களை கண்டித்தும் தொடராக நீங்கள் ஆற்றிய பணி உங்களுக்கு பல முறை சிறை வாசத்தையேற்படுத்தியது.ஆனாலும் மனம் தளராமல் எகிப்து மக்களின் விமோசனத்திற்கு குரல் கொடுத்து வரலாற்று பதிவாகியுள்ள நீஙகள் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ளது மீண்டும் அரபுலகின் வசந்தத்திற்கு வழி கோலும் என அமைச்சர் றிசாத் பதியுதீன் சுட்டிக்காட்டியுள்ளார்.
பொறியியல் துறையில் கலாநிதி பட்டம் பெற்று பல துறையியலாளர்களை உருவாக்கியுள்ளமை மற்றும் நீதியான ஆட்சியொன்றை ஏற்படுத்த போராடிய போராட்டங்களின் வெளிப்பாடாகவே மக்கள் உங்களை ஆட்சித் தலைவராக தெரிவு செய்துள்ளார்கள் என தெரிவித்துள்ள அமைச்சர் றிசாத் பதியுதீன்இஇலங்கைக்கும்-எகிப்துக்கும் இடையில் உ்ள்ள உறவுகள் தொடர்ந்தும் வலுவானதாக இருக்க தங்களது தெரிவு உதவுமென நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
Post a Comment