வடக்கு முஸ்லிம்கள் தொடர்பில் பிரிட்டன் தூதுவருடன் அமைச்சர் றிசாத் கலந்துரையாடல்
இலங்கைக்கான பிரித்தானிய உயர் ஸ்தானிகர் ஜோன் ரண்கின் அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான றிசாத் பதியுதீனை அமைச்சில் சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
இதன்போது வடக்கு முஸ்லிம்களின் வெளியேற்றம், அவர்களின் மீள்குடியேற்றம், அவர்கள் தற்போது அனுபவிக்கும் இன்னல்கள், அவர்களின் எதிர்காலத்திற்காக மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து பிரிட்டன் தூதுவரின் கவனத்திற்கு கொண்டு வந்ததாக அமைச்சர் றிசாத் பதியுதீன் யாழ் முஸ்லிம் இணையத்திற்கு தொலைபேசி மூலம் தெரிவித்தார்.
இதற்கு பதிலளித்துள்ள பிரிட்டன் தூதுவர் மிகவிரைவில் தான் யாழ்ப்பாணம் மற்றும் மன்னார் பகுதிகளுக்கு விஜயம் மேற்கொள்ளவிருப்பதாகவும், அங்குள்ள முஸ்லிம்களின் தேவைகள் குறித்து கவனம் செலுத்துவதாகவும் அமைச்சர் றிசாத் பதியுதீனிடம் உறுதியளித்துள்ளார்.தற்போது வடக்கு,கிழக்கு சமாதான சூழல் குறித்து அமைச்சர றிசாத் பதியுதீன் உயர் ஸ்தானிகரிடம் எடுத்துரைத்ததுடன்,பிரித்தானிய முதலீட்டாளர்கள் இலங்கையில் முதலீடு செய்ய வாய்ப்புக்கள் ஒள்ளது என்றும் எடுத்துரைத்துள்ளார்.
இர்ஷாத் ரஹ்மத்துல்லா
தாம் புதிய உயர் ஸ்தானிகராக பதவியேற்றதன் பின்னர் முதலாவது தங்களை சந்தித்துள்ளதாகவும்,எதிர் காலத்திலும் இரு நாடுகளுக்குமான் வர்த்தக உறவுகள் குறித்து தொடர் பேச்சுக்களை நடத்தவுள்ளதாகவும் உயர் ஸ்தானிகர் தெரிவித்ததுடன்,தாம் வடக்கிற்கு உத்தியுாகபூர்வ விஜயமொன்றை மேற்கொள்ளவுள்ளதாகவும் உயர் ஸ்தானிகர் அமைச்சரிடத்தில் எடுத்துரைத்தமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment