Header Ads



இந்த சிறுமி உயிரோடு வரட்டும்..!


கடந்த 5 நாட்களுக்கு முன் தமிழ்நாடு ஆள்துளை கிணற்றிற்குள் விழுந்த 4 வயது சிறுமியை மீட்க ராணுவத்தினர் ‌போராடி வருகின்றனர். 85 மணிநேரமாக மீட்புப்பணிகள் நடந்து வருகின்றன. சிறுமி மகி இருக்கும் இடத்தை நெருங்கிவிட்டதாகவும், சிறிது நேரத்தில் அவர் மீட்கப்படலாம் எனவும் தகவல்கள் கூறுகின்றன. எனினும் அவரது உடல்நிலை குறித்த தகவல்கள் தெரிவிக்கப்படவில்லை. மகியின் உடல் அசைவின்றி உள்ளதாக கூறப்படுகிறது.

அரியானாவில், 70 அடி ஆழமுள்ள ஆழ் துளை கிணற்றில், மகி சிறுமி தவறி விழுந்தார். கடந்த 5 நாட்களாக மீட்புப்படையினர் போராடி மகியை மீட்க முயற்சிக்கின்றனர். முன்னதாக நேற்று மகியை மீட்கும் முயற்சியில் அருகில் குழி தோண்டிய போது பாறைகள் இருந்ததால் முட்டுக் கட்டை ஏற்பட்டது. தற்போதைய நிலையில் இன்னும் சிறிது நேரத்தில் மீட்கப்படலாம் என தொடர்ந்து செய்திகள் வெளிவந்த வண்ணம் உள்ளன. இதனால் மானேசர் கிராமமே குழந்தை உயிருடன் மீட்கப்பட வேண்டும் என பிராத்தனை செய்து வருகின்றனர்.

அரியானா மாநிலம் மானேசர் அருகே உள்ள கிராமத்தை சேர்ந்த மஹி, 4 என்ற சிறுமி, கடந்த 20ம் தேதி இரவு, தன் வீட்டுக்கு அருகே விளையாடிக் கொண்டிருந்தாள். அப்போது, அருகில் இருந்த 70 அடி ஆழமுள்ள ஆள் துளை கிணற்றில், தவறி விழுந்து விட்டாள். இந்த தகவல் தெரிய வந்ததும், மீட்பு படையினர் அங்கு விரைந்து சென்று, சிறுமியை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால், சிறுமிக்கு, கயிற்றை பிடித்து மேலே வரும் அளவுக்கு விவரம் தெரியவில்லை.

இதையடுத்து, ராணுவ வீரர்களும், அங்கு வந்தனர். சிறுமி விழுந்த இடத்துக்கு சற்று அருகில், மீட்பு குழுவினர் மிகப் பெரிய பள்ளத்தை தோண்டி மீட்புப்பணியை மேற்கொண்டனர்.. ஆள் துளை கிணற்றுக்கு பக்கவாட்டில் தோண்டப்படும் இந்த பள்ளத்தின் வாயிலாக, சிறுமி இருக்கும் இடத்துக்கு சென்று, அவளை மீட்பதற்கு கடும் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
ஆக்சிஜன் செலுத்தப்பட்டது: சிறுமி, சுவாசிப்பதற்காக ஆள் துளை கிணற்றுக்குள், "ஆக்சிஜன்' செலுத்தப்படுகிறது. நேற்று முன்தினம் காலையில், "இன்னும் சில மணி நேரத்தில் சிறுமியை மீட்டு விடுவோம்' என, மீட்பு குழுவினர் தெரிவித்தார். மாலையில் நிலைமை தலைகீழானது. சிறுமி விழுந்த துளையில் அருகில் மீட்பு குழுவினர் பள்ளம் தோண்டும் இடத்தில், கடினமான பாறைகள் நிறைந்திருப்பதால், விரைவாக பள்ளம் தோண்ட முடியவில்லை என, தெரிய வந்துள்ளது. இதனால், கடந்த நான்கு நாட்களாக 70 அடி பள்ளத்தில் சிக்கியிருக்கும் மஹியின் கதி என்ன ஆகும் என தெரியவில்லை.

மீட்பில் தாமதம்: தற்போது மீட்புப்படையைச்சேர்ந்த ஒரு வீரர் மகி சிக்கியுள்ள குழி அருகே சென்றுள்ளார். மகி மீட்டவுடன் அவருக்கு மருத்துவ உதவி செய்ய ஆங்கேயே முதலுதவி சிகிச்சைக்கு தேவையான அனைத்து வசதிகளும் செய்யப்பட்டிருந்தன. கடந்த 84 மணிநேர போராடியும் மகியை மீட்க தொடர் போராட்டமே நடந்து வருகிறது.

பெண் குழந்தைகள் பாதுகாப்புகமிஷன் கண்டனம்: இதற்கிடையே அரியானா மாநில பெண் குழந்தைகள் பாதுகாப்பு கமிஷன் , மகி ஆள்துளை கிணற்றில் விழுந்த சம்பவத்திற்கு காரணமான கிணற்றின் உரிமையாளர் மீது நடவடிக்கை எடு்க்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளது. மேலும் இது போன்ற ஆள்துளை கிணறுக்கள் தோண்டப்பட்டால் பணி முடிந்தவுடன் உடனடியாக மூட வேண்டும என ஏற்கனவே சுப்ரீம் உத்தரவிட்டிருந்ததை சுட்டிக்காட்டி அரியான தலைமைச்செயலர் தகுந்த விளக்கம் அளிக்க வேண்டும் எனவும் கடிதம் எழுதியுள்ளது.

No comments

Powered by Blogger.