செப்டம்பரில் வடமாகாண சபை தேர்தலா..?
pp
இந்தியப் பிரதமரின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவ்சங்கர் மேனனை எவ்வாறு சமாளிக்கலாம் என்பது குறித்து நேற்று முன்தினம் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் ஆராயப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
நேற்றிரவு கொழும்பு வந்த இந்தியப் பிரதமரின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவ்சங்கர் மேனன் இன்று மகிந்த ராஜபக்சவையும், பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்சவையும் சந்திக்கவுள்ளார்.
இதன்போது, மீள்குடியமர்வு, வடக்கு மாகாணசபைக்கான தேர்தல், வடக்கு, கிழக்கில் படைக்குறைப்பு உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து முக்கியமான பேச்சுக்கள் நடத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அரசுக்கு கடும் அழுத்தம் கொடுக்கும் வகையில் மேனனின் பயணம் அமையும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், நேற்றுமுன்தினம் நடந்த அமைச்சரவைக் கூட்டத்தில் இதுபற்றி ஆராயப்பட்டுள்ளது.
இதன்போது, தற்போது வடக்கில் மேற்கொள்ளப்படும் கண்ணிவெடி அகற்றும், மீள்குடியமர்வு நடவடிக்கைகள் நிறைவடைந்ததும், வடக்கு மாகாணசபைக்கான தேர்தலை செப்ரெம்பர் மாதம் நடத்தப்படும் என்ற உறுதிமொழியை மேனனுக்கு வழங்குவது என்று முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
இதற்கிடையே வடக்கு மாகாணசபைக்கான தேர்தல் செப்ரெம்பர் மாதம் நடத்தப்படும் என்று மகிந்த ராஜபக்ச தம்மிடம் கூறியதாக, அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஆங்கில இணையம் ஒன்றுக்கு தகவல் வெளியிட்டுள்ளார்
Post a Comment