Header Ads



கிழக்கு பல்கலைக்கழக விவகாரம் - ஹிஸ்புல்லா வழங்கிய நியமனம் சரியானதா..?


கிழக்குப் பல்கலைக்கழக பேரவையில் புதிதாக நியமிக்கப்பட்டுள்ள உறுப்பினரின் நியமனத்தை மீளப்பெறுமாறு வலியுறுத்தி மாணவர்கள் ஆரம்பித்துள்ள வகுப்பு பகிஷ்கரிப்பு தொடர்ந்தும் முன்னெடுக்கப்படுகின்றது.
இது தொடர்பாக மாணவர்கள் ஒன்றியம் ஏற்கனவே தமக்கு அறிவித்திருந்ததாக கிழக்குப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் கலாநிதி கிட்ணர் கோபிந்தராஜா தெரிவித்தார்.

பல்கலைக்கழக பேரவையின் உறுப்பினராக இருந்த அருட்தந்தை ஒருவர் காலமானதை அடுத்து, அந்த வெற்றிடத்திற்கு இன்னுமொரு அருட் தந்தையே நியமிக்கப்பட வேண்டும் என மாணவர் ஒன்றியம் கோரிக்கை விடுத்துள்ளது. எனவே தமது கோரிக்கை நிறைவேற்றப்படும் வரையில் விரிவுரைகளில் கலந்துகொள்ளப் போவதில்லை என்றும் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் குறிப்பிட்டுள்ளது.

அனைத்துப் பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்களின் பணிப்பகிஷ்கரிப்பு காரணமாக மாணவர்களின் பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்கு சிக்கல் நிலை காணப்படுவதாக கிழக்குப் பல்கலைக்கழக துணை வேந்தர் கூறினார்.
தமிழ் ஊடகங்களின் வாதம்

கிழக்கு பல்கலைக்கழக பேரவைக்கு பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாவால் நியமிக்கப்பட்டவரை நீக்கி விட்டு மட்டக்களப்பு திருமலை மறைமாவட்ட ஆயர் கிங்ஸ்லி சுவாம்பிள்ளை அவர்கள் சிபார்சு செய்யும் ஒருவரை நியமிக்க வேண்டும் என கோரி கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள் நாளாக பகிஷ்கரித்து போராட்டங்களை நடத்தினர்.

கிழக்கு பல்கலைக்கழக பேரவை உறுப்பினராக இருந்த வணபிதா சிறிதரன் சில்வெஸ்ரர் காலமானதையடுத்து அந்த இடத்திற்கு பிரதியமைச்சர் ஹிஸ்புல்லா முஸ்லீம் ஒருவரை நியமித்துள்ளார். ஏற்கனவே 3 முஸ்லீம் உறுப்பினர்கள் உள்ள கிழக்கு பல்கலைக்கழக பேரவையில் முஸ்லீம்களின் எண்ணிக்கை நான்காக அதிகரித்துள்ளதுடன் சிங்கள உறுப்பினர்கள் 3பேரும் முஸ்லீம் உறுப்பினர்கள் 4பேரும் சேர்ந்து கிழக்கு பல்கலைக்கழகத்தில் தமிழர்களுக்கு விரோதமான தீர்மானங்களையே மேற்கொண்டு வருகின்றனர்.


1 comment:

  1. ITHU ENNA CHURCHAA? AAYAR SETHTHAAL AAYAR MEENDUM NIYAMIKKA DONT TALK RACISM HERE UNIVERSITY GOVERN BY MINISTRY OF HIGH EDUCATION SO HISBULLAH A MINISTER SO LEAVE IT UP TO THEM IF YOU DONT PARTICIPATE ON ANY LECTURE SITTING WHO GOT WHAT TO LOSE YOU OR HISBULLAH. PULI KAADATHTHANAM JAFFNA UNIVERSITY ILUM BATTICOLA ILUM SUMMA VILAIYAADUKIRATHU YAAR UYIR ITHARKKU NEXT ON THE LISTIL IRUKKO THERIYAATHU KAWANAM

    ReplyDelete

Powered by Blogger.