கிடைக்கும் சந்தர்ப்பங்களை கொண்டு கல்வியில் முன்னேற வேண்டும் - றிசாத் (படங்கள்)
இர்ஷாத் றஹ்மத்துல்லா
இலங்கையிலுள்ள முஸ்லிம் பாடசாலைகளின் முன்னோடியான பெண்கள் பாடசாலையாக கொழும்பு முஸ்லிம் மகளிர் கல்லுரி மிளிர வேண்டும் என்றும் அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸின் தேசிய தலைவரும்,கைத்தொழில்,வணிகத் துறை அமைச்சருமான றிசாத் பதியுதீன் தெரிவித்தார்.
கொழும்பு பம்பலபிட்டி முஸ்லிம் மகளிர் கல்லுரியில் இன்று வியாழக்கிழமை மாலை இடம் பெற்ற வருடாந்த இஸ்லாமிய தின நிகழ்வின் போது பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும் போது அமைச்சர் மேற்கண்டவாறு கூறினார். பாடசாலை அதிபர் கலாநிதி ஹஜர்ஜான் மன்சூர் தலைமையில் பாடசலை கேட்போர் கூடத்தில் இடம் பெற்ற நிகழ்வில் மேலும் அமைச்சர் றிசாத் பதியுதீன் பேசுகையில்,
நான் பிரதி நிதித்துவம்படுத்தும் வடக்கில் இருந்து இடம் பெயரந்த நிலையில் நலன்பரி முகாம்களில் இருக்கும் மாணவர்கள் வருடமொன்றுக்கு பல்கலைக்கழகத்துக்கு 200 பேர்கள் தெரிவு செய்யப்படுகின்றனர். அது அவர்கள் கல்வியின் பால் கொண்டுள்ள ஆர்வமும்,முயற்சியுமாகும்.அதே போன்று நாமும் பல்துறைகளில் பட்டங்களை பெற வேண்டும். என்பது எனது எதிர்பர்ப்பாகும்.
இஸ்லாம் மார்க்கம் என்பது சகோதரத்துவத்தை வலியுறுத்தும் மார்க்கமாகும். அயலவர்களுடன்,மற்றும் ஏனைய மதத்தவர்களுடன்,நாம் விட்டுக் கொடுப்புடனும்,சகிப்புத் தன்மையுடனும் நடந்து கொள்ள வேண்டும். இந்த நாட்டை பொறுத்த வரையில் அவரவர் தமது மத,காலாசார விழுமியங்களை பேணி வாழ்வதற்கு எவ்வித தடையுமில்லை. அது அடிப்படை உரிமையாகும். அதற்கான முழுமையான அங்கீகாரம் அரசியலாப்பில் வழங்கப்பட்டுள்ளது .
நாம் இந்த நாட்டில் மூன்றாவது சமூகமாக வாழ்ந்த போதும்,எமது உரிமைகளை பெரும்பான்மை சமூகத்திடமிருந்து பெற்றுக் கொள்ள முடியுமாக இருக்கின்றது.இன்று சமாதானம் ஏற்பட்டுள்ளது,அன்று யுத்தம் நிறைந்த காலத்தில் மாணவர்களை பாடசாலைகளுக்கு அனுப்புவதற்கு கூட அச்சமான சூழல் இருந்தது.இன்று அந்த நிலை இல்லை.கிடைக்கும் சந்தர்ப்பங்கள்,வளங்கள் என்பனவற்றை கொண்டு எமது சமூகம் கல்வியின் பால் முன்னேற வேண்டும்.
கற்ற சமூகத்தை உருவாக்கும் பயணம் என்பது எமது சமூகத்திற்கு இன்று தேவையானதொன்று ,உயர் பதவிகளை கொண்டவர்களை உருவாக்குவதற்கும்,எமது இறுதி இலக்கான சுவனம் நோக்கிய பயணத்திற்கும் சன்மார்க்கம் இன்றியமையாதது என்றும் அமைச்சர் றிசாத் பதியுதீன் கூறினார். மாணவிகளது கலை நிகழ்சிகளும்,இடம் பெற்றதுடன்,அமைச்சர் றிசாத் பதியுதீனின் வருகையை பாராட்டி பாடசாலை அதிபரினால் நினைவு சின்னமொன்றும் வழங்கப்பட்டது.
Post a Comment