Header Ads



'சிரியா தண்டனை பெறுவதில் இருந்து விடுபட முடியாது' - துருக்கி அறிவிப்பு

தமது நாட்டின் இரண்டாவது விமானம் மீதும் சிரியா தாக்குதல் நடத்தியுள்ளதாக துருக்கி குற்றஞ்சாட்டியுள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை சூட்டு வீழ்த்தப்பட்ட விமானத்தை மீட்கும் பணிகளில் ஈடுபட்டிருந்த தமது விமானம் ஒன்றினை இலக்கு வைத்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக துருக்கி கூறியுள்ளது.

இது தொடர்பாக சிரியா தண்டனை பெறுவதில் இருந்து விடுபட முடியாது என தெரிவித்துள்ள துருக்கியின் பிரதி பிரதமர், எனினும் யுத்தமொன்றுக்கு செல்வது தமது நோக்கமல்ல என கூறியுள்ளார்.

துருக்கியின் ஜெட் விமானம் சிரிய இராணுவத்தால் சுட்டு வீழ்த்தப்பட்டமை தொடர்பாக இன்று நடைபெறும் நேட்டோ அமைப்பின் சந்திப்பில் கலந்துரையாடப்படவுள்ளது.

தமது விமான சுட்டு வீழ்த்தப்பட்டதை அடுத்து நேட்டோ அமைப்பு இந்த சந்திப்புக்கு அழைப்பு விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது. பஷார் அல் அசாத்திற்கு எதிரான ஆர்பாட்டங்கள் வலுப் பெற்றதை அடுத்து சிரியாவிற்கும் துருக்கிக்கும் இடையிலான உறவுகளில் விரிசல் ஏற்பட்டுள்ளது.

No comments

Powered by Blogger.