Header Ads



வெளிநாட்டு கனவில் சிக்கி உயிர்களை பணயம் வைக்காதீர்கள் - அரசாங்கம் கோரிக்கை

கடத்தல்காரர்களிடம் சிக்கி தமது உயிர்களை அபாயதத்திற்கு உட்படுத்திக்கொள்ள வேண்டாம் என சட்டவிரோத குடியேறிகளாக நாட்டை விட்டு வெளியேற முனைபவர்களுக்கு இலங்கை அரசாங்கம்  கோரிக்கை விடுத்துள்ளது.

அரசாங்க தகவல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையொன்றிலேயே இந்த விடயம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அவுஸ்திரேலிய கடற்பிராந்தியத்தில் விபத்துக்குள்ளான குடியேற்றவாசிகளின் படகு தொடர்பில் கருத்து வெளியிடும் நோக்கிலேயே இந்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. இருந்த போதும் அந்த படகில் இலங்கையர்கள் இருந்ததாக இருவரை தகவல்கள் வெளியாகவில்லை.

எவ்வாறாயினும், எந்தவொரு பிரஜையும் சட்டவிரோதமாக இவ்வாறான அபாயமிக்க செயற்பாடுகளை மேற்கொள்வதோ அல்லது பிறரை தூண்டுவதோ சர்வதேச ரீதியாக பாரிய தண்டனைக்கு உட்படுத்த கூடிய நடவடிக்கை என அரசாங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.

உலகில் பல்வேறு நாடுகள் சட்டவிரோத குடியேறிகளை எடுத்துச் செல்வதற்கு இலங்கை மத்திய நிலையமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்ட போதும், நாட்டில் அவ்வாறான தீவிர இல்லை என அரசாங்க தகவல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

No comments

Powered by Blogger.