Header Ads



இத்தாலியின் முஸ்லிம் பிரமுகர் வபாத்தானார் - கவலைப்படும் யூதர்கள்

ரோம் ஐக்கிய நாடுகள் சபைக்கான இத்தாலியின் நிரந்தர துணை பிரதிநிதியான சியாலோஜா கடந்த வாரம் மரணமடைந்தார். 1930-ம் ஆண்டு பிறந்தவரான சியாலோஜா 1988-ம் ஆண்டு தனது வாழ்வியல் நெறியாக இஸ்லாத்தை ஏற்றார்.

இத்தாலியின் தலைசிறந்த முஸ்லிம் தலைவரான இவருக்கு மரியாதை செலுத்தும் விதமாக யூதர்கள் துக்கம் அனுஷ்டித்தனர் என யூத செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.

‘நல்லெண்ணம் கொண்ட பேச்சுவார்த்தைகளை நாங்கள் மேற்கொண்ட ஒரு உண்மையான நண்பர் எங்களை விட்டு பிரிந்துவிட்டார்’ என ரோம் யூத அமைப்பின் தலைவரான ரிக்கார்டோ பசிபிசி தெரிவித்ததாக யூத செய்தி நிறுவனம் அச்செய்தியில் மேற்கோள் காட்டியுள்ளது.

“சில இக்கட்டான சூழ்நிலைகளில் கூட சியாலோஜா நல்லெண்ண பேச்சுவார்த்தையின் தரத்தை எவ்வாறு பேணவேண்டும் என்பதை அறிந்தவர்” என மேலும் அவர் விவரித்துள்ளார். சியாலோஜா இஸ்லாமிய  மதத்தை தழுவிய ஓய்வு பெற்ற ஒரு இத்தாலிய ராஜ்ஜிய தூதர். இவர் தனது 82-ம் வயதில் ரோம் நகரில் கடந்த ஜூலை-24 ம் தேதி இவ்வுலகை விட்டுப் பிரிந்தார்.

1996-ம் ஆண்டு இவர் சவூதி அரேபியாவிற்கான இத்தாலியின் தூதராகவும் சேவையாற்றி உள்ளார். சியாலோஜா இத்தாலியின் முஸ்லிம் சிறுபான்மை சமூகத்திற்காக தனது வாழ்நாள் முழுவதும் சேவை செய்தவராவார்.
தூது

1 comment:

  1. எப்படியான முஸ்லிம்கள் எல்லாம் உலகில் வாழ்கிறார்கள் ,அல்லா அவர்களுக்குரிய பதவி யயி வழங்குவானாக

    ReplyDelete

Powered by Blogger.