Header Ads



''மஹிந்த ராஜபக்ஸ பின்வாங்கவில்லை'' - பந்துல ஜெயசேகர விளக்கம்

லண்டனில் நிகழ்த்தவிருந்த உரையை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச நிறுத்தவில்லை என்று ஜனாதிபதியின் ஊடகப் பணிப்பாளர் பந்துல ஜெயசேகர இந்திய ஊடகங்களுக்கு விளக்கமளித்துள்ளார்.

“பிரித்தானிய உரையை நிறுத்துவதற்கு நிர்ப்பந்திக்கப்பட்டார் ராஜபக்ச“ என்று ஜனாதிபதியின் லண்டன் உரை நிறுத்தப்பட்டது குறித்து இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன.

இது குறித்து விளக்கமளித்து இந்திய ஊடகங்களுக்கு குறிப்பு ஒன்றை பந்துல ஜெயசேகர அனுப்பி வைத்துள்ளார்.

அதில், ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச உரையை நிறுத்தவில்லை என்றும், கொமன்வெல்த் வர்த்தக சபையும், லண்டன் நகரமுமே அவரது உரையை நிறுத்தி விட்டதாகவும் அவர் கூறியுள்ளார். துரதிஸ்டவசமாக லண்டன் நகரபிதாவின் உரையும் இதனால் நிறுத்தப்பட்டதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

2 comments:

  1. OUT OR NOT OUT?

    ReplyDelete
  2. Mahinda Not out.

    Prabakaran and LTTE is totally wiped out from this land.

    ReplyDelete

Powered by Blogger.