ஆசாத்தின் வெறியாட்டம் தொடருகிறது - சிரியாவில் அப்பாவி பொதுமக்கள் 86 பேர் படுகொலை
சிரியாவின் ஹமாவில் அரச ஆதரவுப் படை 86 அப்பாவி பொதுமக்களை படுகொலை செய்துள்ளதாக செயற்பாட்டாளர்கள் குறிப்பிட்டுள்ளனர். இதில் 20க்கும் மேற்பட்ட குழந்தைகள் 20க்கும் மேற்பட்ட பெண்கள் உள்ளடக்கப்படுவதாக குறிப்பிட்டுள்ளது.
ஹமா பகுதியின் குபரியா மற்றும் மார்சால் கிராமங்களிலேயே இந்த கொடூர தாக்குதல் இடம்பெற்றுள்ளது. சிரியாவின் ஹவ்லா நகரில் கடந்த இரு வாரங்களுக்குள் இதே போன்ற தாக்குதலில் 108 அப்பாவி பொதுமக்கள் கொல்லப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
எனினும் ஹமா நகர தாக்குதல் தீவிரவாதிகளின் செயல் என சிரிய அரச தரப்பில் கூறப்பட்டுள்ளது.
இந்த படுகொலையை அரச ஆதரவு பெற்ற ‘ஷபியா’ என்ற ஆயுதக் குழுவே நடத்தியதாக அரச எதிர்ப்பாளர்கள் தரப்பில் கூறப்பட்டுள்ளது. இவர்கள் அருகில் உள்ள அரச ஆதரவு கிராமங்களில் இருந்து வந்து எந்த பாதுகாப்பும் இல்லாமல் இருந்த கிராம வாசிகளை படுகொலை செய்ததாக கூறப்பட்டுள்ளது.
இவர்கள் கத்தியால் குத்தப்பட்டும் நெருங்கிய இடைவெளியில் சுடப்பட்டு கொடூரமான முறையில் கொல்லப் பட்டிருப்பதாக ஹமா நகரின் செயற் பாட்டாளர் ஒருவர் பி.பி.சிக்கு தெரிவித்துள்ளார். இதேபோன்று குபரியா கிராமப் பகுதியில் இருந்து இராணுவம் வெளியேறியதைத் தொடர்ந்து அங்கிருந்து 40 உடல்கள் மீட்கப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
I,you,we, still don't know the real fact but Innalillahi Wainna ilaihi raajioon allahumma agfirhum warahamhum you we what happened to Libya Iraq Afghanistan Palestine. so think how India created LTTE and how CIA created Al Qaaeda how do they call in Libya Liyan free army now Syrian free army now this all like hiring hitman or mafia
ReplyDelete