Header Ads



பேஸ்புக் குறித்து 6 மாதங்களில் 360 முறைப்பாடுகள் - பாதுகாப்பாக பேண வேண்டுகோள்

AD

முகப்புத்தகம் எனப்படும் பேஸ்புக் (facebook) இணையம் குறித்து இவ்வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் 360 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதென இலங்கை கணினி அவசர செயற்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது.

முறைப்பாடுகளில் அதிகமானவை போலி பேஸ்புக் கணக்குகள் தொடர்பானவை என அப்பிரிவின் தகவல் பாதுகாப்புப் பொறியியலாளர் ரொசான் சந்திரகுப்த குறிப்பிட்டுள்ளார்.

விசேடமாக பேஸ்புக் கணக்கில் பலாத்காரமாக உள்நுழைதல் குறித்தும் அதிக முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக அவர் தெரிவித்தார்.  இதனால் பேஸ்புக் கணக்கு வைத்திருக்கும் பாவனையாளர்கள் தங்களுடைய கணக்குகளை பாதுகாப்பாக பேணவேண்டும் என அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

No comments

Powered by Blogger.