Header Ads



இலங்கையில் 35 வானொலிகள், 15 தொலைக்காட்சிகள் - ஆனால்.. சோனகனுக்கு எதுவுமில்லை

இலங்கையில் தற்போது ஊடகத்துறை அமைச்சின் கீழ் 35 வானொலிகள் 15 தொலைக்காட்சி நிறுவனங்கள் இலங்கை பத்திரிகைச் சபையில் நாளிதழ்கள் சஞ்சிகைகள் என 160 அச்சு ஊடகங்கள் பதிவாகியுள்ளன என்ற தகவலை ஊடக அமைச்சின் செயலாளர் டபிள்யு.பி.கனேகல தெரிவித்துள்ளார்.

இலங்கை பத்திரிகைச் சபையும் அரசாங்கத் தகவல் திணைக்களமும் இணைந்து ஏற்பாடு செய்திருந்த தற்போதைய அரசியலும் ஊடகவியலும் என்ற தொனிப்பொருளில் நடைபெற்ற ஊடக கருத்தரங்கொன்றில் உரையாற்றும்போதே அவர் மேற்படி தகவலை வெளியிட்டார்.

தொடர்ந்து கருத்து வெளியிட்ட செயலாளர் இலங்கையிலுள்ள சுமார் 21 மில்லியன் மக்களுக்கு தகவல்களை வழங்கும் ஊடகங்களாக மேற்படி தொலைக்காட்சிகள் வானொலிகள் மற்றும் பத்திரிகைகள் சஞ்சிகைகள் காணப்படும் நிலையில் இலங்கையின் சட்ட திட்டங்களுடன் இணைந்து பணியாற்ற வேண்டியது இந்நாட்டின் ஊடகவியலாளர்களின் பொறுப்பு என தெரிவித்துக்கொண்டார்.

அத்துடன் தேசியப் பிரச்சினை தேசிய அபிவிருத்தி ஆகியவற்றில் எவ்வித அரசியல் பேதமுமின்றி அனைத்துத் தரப்பையும் புரிந்துகொண்டு தேசிய வேலைத் திட்டத்தில் ஊடகவியலாளர்கள் பங்கெடுக்க வேண்டும் என்பதுடன் ஊடகவியலாளர்கள் எழுதும் வெளியிடும் கருத்துக்கள் குறித்தும் காண்பிக்கும் செய்திகள் குறித்தும் பொறுப்புடன் செயல்பட வேண்டும் எனவும் கனேகல மேலும் தெரிவித்தார்.

2 comments:

  1. சோனகனுக்கு எதுவுமில்லை என்று கவலைப்படுவதில் அர்த்தமில்லை.


    வானொலியில் கிடைக்கின்ற முஸ்லிம் நிகழ்ச்சி நேரத்தை எப்படியெல்லாம் மார்க்கத்திற்கு முரணான இசை, விளம்பரங்கள், நாடகங்கள் கூத்துக்கள் என்று சீரழிக்கின்றார்கள்.

    ReplyDelete
  2. நிச்சயமாக எந்தவொரு சமுதாயத்திற்குரியதையும், அவர்கள் தங்களுக்குரியதை தாங்களாக மாற்றிக் கொள்ளாத வரையில் அல்லாஹ் அதனை மாற்றியமைப்பதில்லை. (குர்ஆன் 13:11)

    ReplyDelete

Powered by Blogger.