300 ஆண்டுகள் பழமையான தர்கா தீயில் கருகியது
தூது
இஸ்லாமிய அறிஞர் முஹியத்தீன் ஷேக்கின் பெயரால் கஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகரில் கன்யார் என்ற இடத்தில் கட்டப்பட்டுள்ள புராதன தர்கா தீயில் கருகி நாசமடைந்தது. இங்கே பாதுகாக்கு வைக்கப்பட்டிருந்த அவரது புராதனப் பொருட்கள் என கருதப்படுபவை பாதுகாப்பாக இருப்பதாக அரசு அறிவித்துள்ளது. முற்றிலும் மரத்தால் கட்டப்பட்ட இந்த தர்கா 300 ஆண்டுகள் பழமையானது. பேரிடர் மீட்பு பணியாளர்கள் உரிய நேரத்தில் வராததை கண்டித்து கோபமடைந்த அப்பகுதி மக்கள் போலீசுக்கு எதிராக போராட்டம் நடத்தியதோடு கல்வீச்சிலும் ஈடுபட்டனர்.
நேற்று காலை 6.30 மணியளவில் தர்காவிற்கு உள் பகுதியில் இருந்து உருவான தீ நிமிடங்களுக்குள் மளமளவென பரவியது.
முஸ்லிம் சமுதாயத்தைச் சார்ந்த சிலரால் பீர் தஸ்தகீர் ஸாஹிப் என்றும் ஹிந்துக்களால் கஹ்னுப் என்றும் அழைக்கப்படும் அறிஞர் ஷேக் அப்துல் காதிர் ஜீலானியின் புராதனப் பொருட்கள் 337 ஆண்டுகளுக்கு முன்பு ஆப்கானிஸ்தான் கவர்னராக இருந்த அப்துல்லாஹ் கான் என்பவர் கஷ்மீருக்கு கொண்டுவந்தார். தர்காவில் பாதுகாத்து வைத்திருந்த கைவினைப் பொருட்களும் தீயில் கருகி நாசமடைந்துள்ளன.
தீ விபத்து சம்பவத்தில் சதித்திட்டம் ஏதேனும் பின்னணியில் உள்ளதா? என்பது குறித்து போலீஸ் விசாரணை நடத்தி வருகிறது. போராட்டம் நடத்தியவர்களை கலைக்க போலீஸ் கண்ணீர் புகையை உபயோகித்தது. பொதுமக்கள் நடத்திய கல்வீச்சில் 11 போலீஸ்காரர்கள் உள்பட ஐம்பதுக்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். கன்யாருக்கு அருகேயுள்ள போலீஸ் ஸ்டேசனை ஒரு கும்பல் தாக்கியது. தீயணைப்பு படையினரை மக்கள் தடுத்து வைத்தபோது பெரியவர்கள் தலையிட்டு அவர்களை விடுவித்தனர்.
போராட்டம் வலுத்ததை தொடர்ந்து லால்சவுக்கில் கடைகள் மூடப்பட்டன. கன்யாரில் ஊரடங்கு உத்தரவுக்கு சமமான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக போலீஸ் அறிவித்துள்ளது. ஊரடங்கு உத்தரவை போலீஸ் பிறப்பித்துள்ளதாக பொதுமக்கள் கூறுகின்றனர்.
அதேவேளையில் தீவிபத்துக் குறித்து கஷ்மீர் டிவிசனல் கமிஷனர் விசாரணை நடத்துவார் என சட்ட அமைச்சர் அலி முஹம்மது ஸாகர் தெரிவித்தார். சம்பவ இடத்திற்கு வருகை தந்த முஹம்மது ஸாகர், உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். தர்கா பழைய வடிவிலேயே புனர்நிர்மாணிக்க வக்ஃப் போர்ட் நடவடிக்கை எடுக்கும் என்று அமைச்சர் கூறினார்.
இதனிடையே தர்காவில் ஏற்பட்ட தீவிபத்து சம்பவத்தை கண்டித்து கஷ்மீரில் பல்வேறு அமைப்புகள் முழு அடைப்பிற்கு அழைப்பு விடுத்துள்ளன. கஷ்மீர் லிபரேசன் ஃப்ரண்டும், உயர்நீதிமன்ற பார் அசோசியேசனும் முழு அடைப்புக்கு அழைப்பு விடுத்துள்ளன. தேசிய மாநாட்டுக்கட்சி தலைவரும், மத்திய அமைச்சருமான ஃபரூக் அப்துல்லாஹ், இச்சம்பவத்துக்கு ஆழ்ந்த வருத்தம் தெரிவித்துள்ளார்.

கருத்தில் உள்ள உண்மை யாழ் முஸ்லிம் ஆசிரியரையும்
ReplyDeleteசுட்டுவிட்டது போலும்
யாழ் குருவி
ezoellam ramba mukiyamana news allahwoku inai weaipawarhal darkakal alikanum
ReplyDeleteDestroying the traces of the 'existence' of one ethnic; It is the first step towards, ethnic-cleansing;
ReplyDeleteஇதனால் இஸ்லாத்துக்கு ஒரு பயனும் இல்லை.
ReplyDeleteஇங்கே ஹிந்துக்களும் வருகின்றார்கள்.
தர்கா இருந்த இடத்திலிருந்து அதன் எச்சங்கள் முழுமையாக அகற்றப் பட்டு,
படைத்த இறைவனை மட்டும் வழிபாடும் மஸ்ஜித் ஒன்று அமைக்கப் பட வேண்டும்.
அல்லாஹ்வுக்காக மட்டும் சுஜுது செய்யும் இறையிலத்தை கட்டி,அல்லாஹ்விடம் இவ்வளவு காலமும் சிர்க் செய்ததற்கு பாவ மன்னிப்பு தேடிக்கொள்ளவும்.
ReplyDeleteMeraan