Header Ads



இலங்கையில் 3 மாதங்களில் 775 பேருக்கு எயிட்ஸ் தொற்றியது

கடந்த ஜனவரி மாதம் முதல் மார்ச் மாதம் 31 ஆம் திகதிவரை நாடு முழுவதும் 775 எயிட்ஸ் நோயாளர்கள் கண்டுபிடிக்கப்பட்டிருப்பதாகவும் அவர்களுள் காலி மாவட்டத்தில் மாத்திரம் 52 பேர் உள்ளதாகவும் எயிட்ஸ் நோய் தடுப்பு விசேட நிபுணர் டாக்டர் ஜீ.வீரசிங்ஹ தெரிவித்தார்.

எயிட்ஸ் நோய் சம்பந்தமாக விளக்கமளிக்கும் கருத்தரங்கொன்று ஹிக்கடுவையில் இடம்பெற்ற போதே வைத்திய நிபுணர் இதனைத் தெரிவித்தார்.

சமூக சேவைகள், சிறைச்சாலை அதிகாரிகள், பொலிஸார் தனியார் நிறுவன, அரச நிறுவன ஊடகவியலாளர்கள் உள்ளிட்டவர்களுக்க “எயிட்ஸ்’ நோயின் பயங்கரம் பற்றி தெளிவுபடுத்தும் கருத்தரங்கிலேயே அவர் இதனைக் கூறினார். அவர் மேலும் கூறியதாவது,

“எயிட்ஸ்’ வியாதியானது பயங்கர ஆட்கொல்லி வியாதியாகும். இந்த நோயை தாங்களே தேடிப் பெற்றுக்கொள்வதாகும். பல பெண்களுடன் பாதுகாப்பு இன்றி உடலுறவு கொள்வதாலும் தன்னினச் சேர்க்கையாலுமே இந்த நோய் ஏற்படுகிறது.  எயிட்ஸ் நோயாளர்களுடன் சேர்வதால் இந்த நோய் ஏற்படாது, ஆனால், அவர்களின் இரத்தம் எமது இரத்தத் தோடு கலந்தால் நிச்சயம் எமக்கு அந்த நோய் ஏற்பட்டுவிடும்.

இன்று முழுநாட்டிலும் எச்.ஐ.வி. தொற்றப்பட்டோர் 300 பர் உள்ளனர். அவர்களுள் வருட  முற்பகுதியான முதல் மூன்று மாத காலத்தில் 775 பேர் எயிட்ஸ் நோயினால் பீடிக்கப்பட்டுள்ளனர். காலி மாவட்டத்தில் மாத்திரம் 52 பேர் “எயிட்ஸ்’ வியாதியால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

1987 ஆம் ஆண்டுதான் இலங்கையின் முதன் முதலாக எயிட்ஸ் நோயாயளி ஒருவர் கண்டுபிடிக்கப்பட்டார். ஆசியாவில் தினசரி 5 மில்லியன் பேர் இந்த வியாதிக்குச் சிகிச்சை  பெற்று வருவதாகவும் இது பற்றிய ஆய்வறிக்கையலிருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்

No comments

Powered by Blogger.