வெற்றி பெறுபவர்களுக்கு 156 கோடி ரூபாய்..!
16 அணிகள் பங்கேற்ற யூரோ கால்பந்து போட்டி கடந்த 8-ம் தேதி வார்சா நகரில் கோலாகலமாக தொடங்கியது. போர்ச்சுக்கல், இத்தாலி, ஸ்பெயின், ஜெர்மனி ஆகிய 4 அணிகள் அரையிறுதிக்கு முன்னேறின. இத்தாலி ஜெர்மனியையும், ஸ்பெயின் போர்ச்சுக்கலையும் வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறின. சாம்பியன் பட்டம் யாருக்கு என்பதை தீர்மானிக்கும் இறுதி ஆட்டம் கீவ் நகரில் நாளை நள்ளிரவு 12.15 மணிக்கு நடக்கிறது. இத்தாலி - ஸ்பெயின் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
இரு அணிகளும் பலம் வாய்ந்தவை என்பதால் ஆட்டத்தில் அனல் பறக்கும். சர்வதேச போட்டிகளில் இரு அணிகளும் 26 முறை மோதியுள்ளன. இதில் இத்தாலி 8 ஆட்டத்திலும், ஸ்பெயின் 7 ஆட்டத்திலும் வெற்றி பெற்றுள்ளன. 11 ஆட்டம் டிராவில் முடிந்தது. நாளைய ஆட்டத்தில் சாம்பியன் பட்டம் வெல்லும் அணி கோப்பையுடன் இந்திய ரூ.52 கோடி பரிசையும் அள்ளிச்செல்லும். 2வது இடத்தை பிடிக்கும் அணிக்கு ரூ.31 கோடி கிடைக்கும்.
Post a Comment