Header Ads



பங்களாதேஷில் வெள்ளம் - 100 போ மரணம்,



வங்கதேசத்தின் தென்மேற்கு பகுதியில் கடந்த சில தினங்களாக தொடர்ந்து அடைமழை பெய்து வருகிறது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை  மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2 நாள் பலத்த மழை காரணமாக பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டது. பலர் மழை வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டனர். இதுவரை மழை பாதிப்புக்கு 100-க்கும் மேற்பட்டவர்கள் பலியாகி விட்டனர். அவர்களில் பலரது உடல் இன்னும் கிடைக்கவில்லை.

இந்த நிலையில் பலத்த மழை நீடிப்பதால் வங்கதேசத்தின் தென்மேற்கு பகுதியில் சுமார் 2 1/2 லட்சம் பேர் வீடு இழந்து தவித்து கொண்டிருக்கிறார்கள். உணவு, குடிநீர் கிடைக்காமல் மக்கள் பட்டினியாக உள்ளனர்.

நிலச்சரிவு காரணமாக பாதிக்கப்பட்டவர்களுக்கு எல்லா உதவிகளும் செய்ய முடியாத நிலை நீடிக்கிறது.

No comments

Powered by Blogger.