100 சதவீத முஸ்லிம்களை கொண்ட அக்குறணைக்கு விரைவில் குடிநீர் வசதி - அமைச்சர் தினேஷ்
அக்குறணையிலிருந்து மொஹமட் ஹாபிஸ்
மன்னார் முதற் கொண்டு வவுனியா மாவட்டம் வரையான பகுதிகளுக்கு குடிநீர் வினியோகத்திட்டங்களை மேற்கொள்ளவுள்ளதாக நீரியல்வள அமைச்சர் தினேஷ் குணவர்தனா தெரிவித்தார்.
(24.6.2012) நேற்று இரவு அக்குறணை தெழும்புகஹவத்தை என்ற இடத்தில் 24 கோடிரூபா செலவில் அமைக்கப்பட்ட குடிநழுர் வினியோகத்திட்டத்தை அடுத்து இடம் பெற்ற பொதுக் கூட்டத்திலே அவர் இதனைத் தெரிவித்தார். அமைச்சர் தொடாந்தும் தெரிவித்ததாவது,
இவ்அரசு பல்வேறு அபிவிருத்திப் பணிகளை மேற்கொண்டு வருகிறது. அதில் குறிப்பாக கமநெகும், மக நெகும, திவிநெகும் போன்றவற்றைக் குறிப்பிடலாம். ஆனால் எதிர்காலத்தில் ஜல நெகும் என்ற அபிவிருத்தித் திட்டம் ஒன்று மேற்கொள்ளும அளவிற்கு இன்று நீர் வினியோகத் திட்டத்தில் அரசு முன்னின்று பல பணிகளைச் செய்து வருகிறது.
சுமார் 50 வருடங்களுக்கு மேற்பட்ட காலம் குடிநீர் வசதி செய்து தரும்படி அக்குறணை தெழும்ர்கங வதரதப் பரதேச மக்கள் வேண்டுகோள் விடுத்துவந்த போதும் அக்கனவு இன்று நிறைவேறி உள்ளதாகக் குறிப்பிட்டார். எனவே முஸ்லிம்களை 100 சதவீதம் கொண்ட இப்பகுதிக்கு எதிர்வரும் றமழான் மாதம் முதல் போதியளவு குடி நீர் வசதி செய்து தரப்படும் என்றார்.
பிரதி அமைச்சப் பைசர் முஸ்தபாவும் உரையாற்றினார். பல வருடங்களாக வீழ்த்த முடியாதிருந்து அக்குறணைப் பிரதேச சபையை ஐ.ம.கூட்டணி இம்முறை கைபற்றியதன் விளைவாக இக்குடிநீர் வினியோகம் இலவாகி உள்ளதாகவும் கூறினார்.
இதற்கு உதவி செய்த அனைவரருக்கும் அல்லாஹ் அருள்புரிவனாஹா ஆமீன் . (R .MOHAMED )
ReplyDelete