Header Ads



இலங்கையில் இஸ்லாமிய கிலாபத் - கலாசார மோதலை உருவாக்குமா..?? பகுதி - 1



அஹ்மத் ஷா அஹ்மத் ஜம்ஷாத் (அல் அஸ்ஹரி )

ஆன்மீக வறுமைக்கோட்டின் கீழ் அரசியல் கோட்பாட்டுச் சிந்தனை

முஸ்லிம்களின் கிலாபத் கோட்டையை வீழ்த்த நினைப்பவன் நிச்சயமாக இஸ்லாமிய எதிரியாகத்தான் இருக்க முடியும்

ஆனால் நாம் ஏன் வீழ்ந்தோம் என்று சுய விசாரணை செய்யவும் அதன் பாரதூரத்தை மதிப்பீடு செய்யவும் நமது சமுதாயம் மறந்துவிட்டதோ என்று சொல்லுமளவுக்கு எம் நிலைப்பாடு உள்ளது. கிலாபத்தின் வீழ்ச்சி என்பது வீழ்ச்சி அல்ல எழுவதற்கான பயிற்சியே .

 இஸ்லாத்தின் எதிரிகளின் பலம் பலஈனம் இவற்றை கண்டறிய வரலாறும் வலக்காறும் போதும் .

 ஆனால் முஸ்லிம்களின் பலம் பலஈனத்தை அறிய ஈமானும் ,அல் குர்ஆன் சுன்னாவின் நிழலில் ஏற்படும் ஒற்றுமை எனும் சங்கமம்தான் தேவையாக உள்ளது.

 ஒரு முனையில் ஆன்மீக வறுமை முஸ்லிம்களை வாட்டிகொண்டிருக்க மறுமுனையில் பவ்தீக சூழல் பலமாக நம்மை தாக்க எதிரிகளைபற்றிய ஆழ்ந்த வாசிப்புக்கு முன், எதிர்க்கப்படும் முஸ்லிம் சமூக பரம்பலில் ஏற்பட்ட கோளாறுகள் பற்றிய மீள்வாசிப்பு காலத்தின் தேவையாகவுள்ளது.

 அன்று இஸ்லாத்திற்கு பலதுருவ எதிர்ப்பு இருந்துவந்ததை வரலாறு நெடுகிலும் காணலாம் ஆனால் இன்று இஸ்லாமிய எதிர்ப்பு உலகம் ஒருதுருவமாகவும் இஸ்லாமிய உம்மத் பலதுருவங்கலாகவும் உலக வரைபடத்தில் மாற்றத்தை ஏற்படுத்த மறுஉலக சிந்தனை சிதறியடிக்கபட்டு சடவாத கொட்பாடுகளில் முஸ்லிம் உம்மத் தன்னைத்தானே ஆக்கிரமித்திருக்கிறது.

 டியூனிசியா ,எகிப்து ,லிபியா நாட்டு மக்கள் ,புரட்ச்சி மிக்கவர்கள் என்பதை நிரூபித்துவிட்டனர்,அரசன் ஆளுவது முக்கியமல்ல ஆளப்படும் மக்கள் தெளிவாக இருக்கின்றார்களா என்பதுதான் முக்கியம் என்ற பாடம் நமக்கு இதில் கிடைத்துள்ளது.

 மழை வெயில் பாக்காது பசி பட்டினி உணராது கொதித்தெழுந்து ஆர்பாட்டம் பண்ணிய மக்கள் தாம் கொண்ட கொள்கை நிறைவேறவில்லை என்றால் வீடு திரும்புவார்களா என்ன ?

 புரட்ச்சி இல்லாத சமுதாயம் பலதரப்பட்ட வரட்சிக்கு வித்திடும் என்பது எழுதப்படாத உண்மை,கிளர்ச்சி ஆர்பாட்டம் என்பது ஜனநாயக உரிமை என்பதைகூட தெரியாத அளவுக்கு மத்தியகிழக்கு பாலைநில மண்வாசனை கொண்ட மக்கள் அடக்கி ஆளப்பட்டுவந்தனர்.

 மக்களின் சொத்துக்களை சூறையாடி நாட்டின் வளங்களை காவுகொண்ட அரக்கர்கள் அல்லாஹ்வுக்கு கொஞ்சம் கூட பயப்படாத கொடுங்கோலர்கள் என்பதை மக்களின் கோபம் காட்டிதந்தது.

 டியூனிசியாவில் ஏற்பட்ட அதிர்வு பிராந்திய அரசியல் மாற்றத்தில் கனதியான வகிபாகம் கொண்டுள்ளது என்பதில் ஐயம் இல்லை.

 தமது சொந்த நாட்டின் சியோனிச,முதலாளித்துவ ஆக்கிரமிப்புக்கு எதிராக ஆயுதம் தூக்கிய இஸ்லாமிய விடுதலை இயக்கங்கள் தீவிரவாதிகளாக மீடியாக்களில் சித்தரிக்க மேற்கத்தைய நாடுகள் முயற்சித்தமை உலகறிந்தவிடயம்.

 அதற்கு அரபு நாட்டு சர்வாதிகார அரசியல் மேற்கின் ஆதரவுடன் கணிசமான பங்களிப்பை கொடுத்து வந்ததை எவரும் மறுக்க முடியாது ,மேற்கின் நச்சுக்கருத்துக்களை ஊடகமயப்படுத்த ஊடகஅனுசரணையை வாரி வழங்கிய பெருமை அரபுநாட்டு அரசியல் தலலைமைக்கே சாரும்.

கிளர்ச்சியாளர்கள் ,புரட்சியாளர்கள் ,சாத்வீக வழி மற்றும் அகிம்சைவழி போராளிகள் எத்தனையோ ஆயிரம்பேர் விசாரணை இன்றி ,விசாரணை கமிஷன் இன்றி சிறைவைக்கபட்டிருக்கும் அவல நிலை சர்வாதிகார அரபுலகதில்தான் அரங்கேரியதென்பதை எழுத பேனா முனைகூட வளைந்துகொடுக்க மருத்துநிட்கிறது .

இஸ்லாதிட்கெதிராக அதிக நூல் எழுதப்படும் நாடாக இஸ்லாமிய நாடு எகிப்து இருந்து வந்ததை முஸ்லிம்களின் வரலாற்றில் கருப்பு அத்தியாயமாகவும், மக்கள் மனதில் மாறாத மறுவாகவும் இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை
 கருத்து சுதந்திரம் என்ற பெயரில் நபி ஸல் அவர்களை கேலி சித்திரம் வரைந்து மா நபியின் மாண்புக்கு இழுக்கு ஏற்படுத்த முனையும் மேற்கத்தய அரசியல், யூதர்கலுக்கு உலகில் அனுதாப அலையை ஏற்படுத்த பொய்யாக புனைய்யபட்ட “ஹோலோகோஸ்ட்” நூல் பற்றி அரபு நாடுகளில் கூட எழுத தடையாக இருந்துவந்த வேதனை சுமந்த வரலாறு சர்வாதிகார அடக்குமுறையின் கீழ் நடந்தேறியதை காணமுடிந்தது,

 இன்று மத்திய கிழக்கு நாடுகள் வருடா வருடம் சுதந்திரதினம் அறிவித்துகொண்டாடினாலும் மேற்கத்திய கால் ஊன்ராத காலனித்துவத்தின் கீழ் அடக்கி ஆளப்பட்டு வருவதை தெளிவாக விளங்கிக்கொள்ள முடிகிறது.

 அன்று நாடுகளுக்குள் நுழைந்து ஏற்படுத்திய காலனித்துவம் இன்று சிந்தனைக்காலணித்துவமாக பரிணாமம் அடைந்துள்ளதே தவிர காலணித்துவம் ஒளிந்து ஓயவில்லை என்பது தெளிவு.

 காலனித்துவம் உலகமயமாக்கள் எனும் பெயரில். பொருளாதாரத்தில் மட்டுமல்ல கல்வி ,கலாசாரம் , அக்லாக் போன்ற இன்னோரன்ன விடயங்களிலெல்லாம் புரையோடிபோயுல்லதை முஸ்லிம் நாடுகளில் காண முடிகிறது ,

 மத்திய கிழக்கின் மறுமலர்ச்சி

இன்று மத்தியகிழக்கில் மாற்றம் கொண்டுவரும்பணி முடுக்கிவிடப்பட்டு சர்வாதிகாரத்தின் அயோக்கிய அரசியல் சண்டித்தனதிட்கு ரெத்தம் சிந்திய-சிந்தாத புரட்ச்சி இத்தொடர்கதைக்கு முற்றுபுள்ளி வைத்துள்ளது எனலாம்.
மத்திய கிழக்கின் மக்களின் அரசியல் அறிவில் ஏற்பட்ட வறுமைக்கு காரணம் அரச அட்டூழியங்களின் அரக்க குணம்தான் ,ஆனாலும் அந்த ஒன்றுக்காக நிசப்த நிழலில் எத்தனை நாள்தான் உட்காருவது? ,அரபுகளே உங்களிடம் புரட்ச்சி இல்லை. ஆறாம் விரலாய் சிகரெட் ஏந்திய உங்கள் கைகள் ஏலாம் அறிவாய் ஏன் புரட்சியை மனதில்கூட கொள்ளக்கூடாது ?என்று வினா விடை காணத்துவங்கியது.

ஐரோப்பாவில் அவசியமில்லாத சாராயம் தட்டுபாடு என்றாலே நாட்டு மக்கள் வேளை நிறுத்தம் பகிஷ்கரிப்பு ,அரச எதிர்ப்பு என்று கிளம்பி விடுவர் புரட்ச்சி ஈன்றெடுத்த மண்னின் மைந்தர்கள் அடிப்படை உரிமை இன்றி பல தசாப்தங்கள் அடக்கி ஆளப்பட்டுவந்துள்ளனர்.

 இம்மக்கள் யாரடாஅது? என்று கேட்டால் ஐந்துவருடம் சிறை .எதற்கடா இது? என்றால் இரண்டுவருடம் வனவாசம்.இதற்கு அவசரகால சட்டத்தின் கீழ் கைது என்று பெயர்.

 இப்படி மத்திய கிழக்கு மக்கள் சுதந்திர குரல்வளை நசுக்கப்பட்டு இருந்த அந்த கால கட்டத்தில் அரசியல் யாரும் யாருடனும் பேச பயப்படும் வேளை நீண்ட காலம் அடிமையாக்கபட்டு பல எதிர்பார்ப்பு பலமாக அவர்களை தாக்கியதன் பாதிப்பு எகிப்து ,லிபிய ,டியூனிசிய மக்களின் பேச்சிலும் ,நடவடிக்கைகளிலும் வாடிய வடுவாக இருந்ததை உணர முடிந்தது. இதுவே டியூனிசிய ,எகிப்திய ,லிபிய நாட்டு மக்கள் புரட்ச்சி எடுத்துக்காட்டாக அமைந்தது .

ஆன்மீகத்தின் ஊடான அரசியல் அடைவுகளும் ஜனநாயக அனுசரிப்பும்

மக்களால் மக்களை மக்கள் ஆளும் ஆட்சி மக்களாட்சி, ஜனநாயக ஆட்சி என்று சொல்வர் இதை ஜனநாயகம் என்ற கலைசொல்லில் சொல்லாவிட்டாலும் வேறுவிதமாக மெல்லிய இலன்காற்றில் ஒரு புயல்வந்த வனமாக எத்தனையோ அரசியல் விற்பன்னர்கள் சொல்லி சென்றுள்ளார்கள்.
அரச பீடத்தின் வெற்றிடம் அடைக்கபடுவது மாத்திரம் இஸ்லாத்தின் குறிக்கோள் அல்ல, ஆளப்படும் மக்களின் நிலை ,ஆன்மீக நகர்வு ,கல்வி பொருளாதார சிந்தனை என்பனவற்றின் வகிபாகம் ஆளப்படும் தரப்புக்கு மிகமுக்கியமான அணிகலன்கலாகும்.

 ஜனநாயகம் என்பது இஸ்லாத்தின் எல்லைகளை மீராதவரைக்கும் ஏற்றுகொள்ளதக்கதுதான் ,ஜனநாயகம் என்பது எமது இலக்கு அல்ல ,ஜனநாயகத்தின் ஊடாக கிலாபத் என்பதுவே சமகாலத்தின் அரசியல் சிந்தனை செல்நெரிகளை மீள்வாசிப்புக்கு உட்படுத்தும்போதும் கடந்தகால கசப்பான கிலாபத் வீழ்ச்சியின் காரணிகளையும் ஒருசேர நோக்கும்போதும் கிடைக்கும் நடைமுறை சாத்தியமான அனுபவங்கலாகும்.

 "குடியுயர கோன் உயர்வான்" என்பதன் அர்த்தம் ஔவையாரின் குறுகிய சிந்தனையில் இருந்து இன்னும் ஆழ அகலமாக நோக்கும்போது மக்களின் உடன்பாடான மனநிலை மாற்றம் ஆட்சியின் ஏற்றத்தில் தங்கி உள்ளது என்பதை புரிந்துகொள்ள முடிகிறது,

 அதை இன்னும் இஸ்லாத்துடன் நோக்கும்போது ஆன்மிகம் மக்களில் வருமைகோட்டையோ அல்லது வருமைகோட்டுக்கு கீழ் மட்டத்தயோ அடையும்போது கிலாபத் பலிபீடம் ஏறுகிறது என்பதே வரலாறு நமக்கு கற்றுதந்த பாடம்.

 துருக்கிய உமையா ஆட்சியின் வீழ்ச்சிக்கு காரானிகள் என்ன ?

 இஸ்லாமிய நாடுகள் நவீன அதாதுர்க் கைகளில் சிக்கி சின்னாபின்னமாகி உள்ளமைக்கு காரணம் என்ன ?

 இஸ்லாமிய உம்மதுக்கும் கிலாபதுக்குமான தூரம் என்ன ?

 இதுபோன்ற கேள்விகளுக்கு விடைகாண எதிரிபற்றிய வாசிப்பு ஒருபக்கம் இருக்க இஸ்லாமிய உம்மத் பற்றிய சுயவிசாரனை காலத்தின் தேவையாக உள்ளது.

 இஸ்லாமிய உம்மதுக்கும் கிலாபதுக்குமான தூரம் எளிமையான கணிதத்தில் கணிக்க முடியுமான தூரம்தான்.

 ஈமானுக்கும் இஸ்லாமிய உம்மதுக்கும் உள்ள தூரம்தான் சமகால இஸ்லாமிய உம்மதுக்கும் கிலாபதுக்கும் உள்ள தூரம்.

 ஈமானின் பக்கம் மக்கள் அண்மிக்க அண்மிக்க கிலாபத்தின் இடைவெளி தூரத்தை மக்கள் அன்மிக்கின்றனர். ஈமானைவிட்டு தூரம் செல்லச் செல்ல கிலாபத்தின் தூரம் நீட்சி கண்டுகொண்டே இருக்கும்.

 சென்ற நூற்றாண்டின் விஞ்ஞானி ஐன்ஸ்டீனின் நேரயாத்திரைக் கொள்கை இந்த இடத்திலாவது கொஞ்சமாவது பொருந்தும் என்று நினைக்கிறேன்.

 ஒளிவேகத்தில் பூமியை சுற்றிவரும்போது தனது முதிர்ச்சியை குறைத்துக்கொள்ள முடியும் என்ற ஐன்ஸ்டீனின் அசாத்திய கொள்கை அந்த இடத்தில் பொருந்தாவிட்டாலும்,மக்கள் ஆன்மீக நகர்வுகளில் காட்டும் வேகத்துக்கு ஏற்ப கிலாபத்தை அடையும் வேகம் சாத்தியமாகும் என்பதை உணர்த்தி நிற்கிறது.அத்துடன் நிர்வாக ரீதியான ஒழுங்கமைக்கப்பட்ட புதிய உலக ஒழுங்கிலும் மக்கள் உள்வாங்கப்படுவதும் முக்கியமாகும் .

 மக்களில் ஏற்படும் மனமாற்றம் இயற்கையானது மாற்றத்துக்கு எடுத்துகொள்ளும் விடயதானம் பொறுத்தே சாத்திய நிலையும் அசாத்திய நிலையும் தங்கி உள்ளது.

 மக்களில் ஈமானின் அடியாய் ஏற்பட்ட ஆன்மீக உயர்வு கிலாபதுக்கு வித்திடும் என்பதில் இரண்டு கருத்துக்கு இடமின்றி சொல்ல முடியும் .இவ்வாறான முக்கிய அமானிதத்தை பொறுப்பேற்கும் தரப்பு அமானிதத்தை தாங்கிக்கொள்ளும் அளவுக்கு ஆன்மீக லவ்ஹீக வளம் பெற்றுள்ளதா என்பதை இஸ்லாமிய உம்மத் சிந்திக்க கடமை பட்டுள்ளது.

 ஆட்சி பீடத்தில் அல்லாஹ் எதிர்வு கூறும் சமுதாயம்

சாதாரண உலக விடயத்தில் கூட ஒரு அலுவலக பதவியை பெற்றுகொள்ளும் நபர் அந்த பதவிக்கு தகுதிகாண் பரீட்சைக்கு தோற்றவேண்டிய கட்டாயம் இருக்கும்பொழுது முழு உலகத்தையும் ஆளும் ,நிர்வகிக்கும் தரப்பு எப்படியான பயிற்றுவிப்பு பெற்றிருக்க வேண்டும் என்பதை நாம் ஒருபக்கம் சிந்தித்தாலும் அல்லாஹ்வின் நியதி எப்படி என்பதை கீழ் வரும் விடயத்தின் மூலம் அறிந்துகொள்ள முடியும் .

அல்லாஹ் கிலாபத்தை யாரிடம் ஒப்படைக்க நாடுகிறானோ அப்படியான மக்களிடம் முக்கிய பண்புகளை எதிர்பார்கின்றான்.

 ஒன்று :அல்லாஹ்வுக்கும் ,நபி ஸல் அவர்களுக்கும் கட்டுப்படும் சமுதாயம்
 இரண்டு :நம்பிக்கை கொள்வதுமட்டுமன்றி நல்ல அமல்கள் புரியும் மக்கள்
 மூன்று: அல்லாஹ்வை மட்டும் வணங்கி அவனுக்கு எந்த ஒன்றையும் இனைவைக்காத,அத்துடன் செய்யும் அமல்களை நபி ஸல் அவர்கள் காட்டி தந்த வழிமுறையில் ஒழுகும் சமுதாயம்

 மேலே நான் சொன்ன விடயங்களை உள்வாங்கிய சமுதாயம்தான் அல்லாஹ் தான் கிலாபத்தை கொடுப்பதாக வாக்களித்த சமுதாயமாகும்.

 அல்லாஹ்விடம் கிலாபத்தை எதிர்பார்க்கும் சமுதாயம் அல்லாஹ் தம்மிடம் எதிர்பார்க்கும் பண்புகள் கொண்டுள்ளனவா என்று தம்மை மீள்வாசிப்புக்கு உட்படுத்தும் கட்டாய தேவையில் உள்ளதை மறுக்க முடியாது.

 இதோ நான் மேலே குறிப்பிட்ட அந்த சமுதாயம் பற்றி அல்லாஹ் அன்நூர் என்ற அத்தியாத்தில் சொல்லிகாட்டுகிறான்

 54- அல்லாஹ்வுக்கும், இத்தூதருக்கும் கட்டுப்படுங்கள்!'' எனக் கூறுவீராக! அவர்கள் புறக்கணித்தால் இவர் (முஹம்மத்) மீது சுமத்தப்பட்டது இவரைச் சேரும். உங்கள் மீது சுமத்தப்பட்டது உங்களைச் சேரும். இவருக்கு நீங்கள் கட்டுப்பட்டால் நேர் வழி பெறுவீர்கள். தெளிவாக எடுத்துச் சொல்வது தவிர இத்தூதரின் மீது வேறு (கடமை) இல்லை

 55- அவர்களுக்கு முன் சென்றோருக்கு அதிகாரம் வழங்கியதைப் போல் அவர்களுக்கும் பூமியில் அதிகாரம் வழங்குவதாகவும், அவர்களுக்காக அவன் பொருந்திக் கொண்ட மார்க்கத்தில் அவர்களை உறுதிப்படுத்தி வைப்பதாகவும், அவர்களின் அச்சத்திற்குப் பின்னர் அச்சமின்மையை ஏற்படுத்துவதாகவும் உங்களில் நம்பிக்கை கொண்டு நல்லறங்கள் செய்தோருக்கு அல்லாஹ் வாக்களித் துள்ளான். அவர்கள் என்னையே வணங்குவார்கள். எனக்கு எதையும் இணை கற்பிக்க மாட்டார்கள். இதன் பிறகு (ஏக இறைவனை) மறுத்தோரே குற்றம் புரிபவர்கள்.(அந்நூர் 54-55)

 மேலே நாம் குறிப்பிட்ட இரண்டு ஆயத்களையும் நன்றாக வாசியுங்கள் .54 வது ஆயத் அல் குர்ஆன் சுன்னாவில் மக்களை அழையுங்கள் என்று சொல்கிறது அப்படி வருகின்ற சமுதாயத்துக்கு அல்லாஹ் பிரதி ஈடாக 55 வது ஆயத்தில் ஆட்சியையும் ,அச்சமின்மையையும் ஏற்படுத்துவதாகவும் வாக்களித்துள்ளான்.

மேலே நாம் குறிப்பிட்ட அனைத்து நிபந்தனைகளையும் உள்ளடக்கிய சமுதாயமாக மக்கள் ஒன்று சேரும்போது கிலாபத் அந்த ஒற்றுமையில் சங்கமமாகும் என்பதில் சந்தேகம் இல்லை .இப்படியான சமுதாயத்துக்கே அல்லாஹ் உலகத்தை நிர்வகிக்கும் பொறுப்பை தருவதாக முன்னறிவிப்பு செய்துள்ளான் .

 மேலே நாம் குறிப்பிட்ட அல்லாஹ்வின் கட்டளையை மிகக்கவனமாக நோக்கும்போது இன்னுமொரு முக்கியமான அதிகம் மக்களால் பேசப்படாத விடயத்தை கவனிக்க முடிகிறது

54- அல்லாஹ்வுக்கும், இத்தூதருக்கும் கட்டுப்படுங்கள்!'' எனக் கூறுவீராக! அவர்கள் புறக்கணித்தால் இவர் (முஹம்மத்) மீது சுமத்தப்பட்டது இவரைச் சேரும். உங்கள் மீது சுமத்தப்பட்டது உங்களைச் சேரும். இவருக்கு நீங்கள் கட்டுப்பட்டால் நேர் வழி பெறுவீர்கள். தெளிவாக எடுத்துச் சொல்வது தவிர இத்தூதரின் மீது வேறு (கடமை) இல்லை.

 அல்லாஹ்வுக்கும் தூதருக்கும் கட்டுபடுவதுபற்றி மக்களுக்கு எடுத்துச்சொல்லும் பொறுப்பில் எத்திவைப்பதே அழைப்பாலனின் கடமை அதை ஏற்றுகொல்லாத மக்கள் நஷ்டவாளியாகுவதில் அழைபாலனுக்கு பங்கில்லை .

 அதேநேரம் ஆன்மீக மாற்றத்தில் மக்கள் தெளிவுகள் தமக்கு கிடைத்தபின்பும் மறுப்பார்கள் என்றால் அது மக்களின் குற்றமே.

 தொடரும் .............

No comments

Powered by Blogger.