சென்னையில் தம்புள்ள பள்ளிவாசல் தாக்குதலுக்கு எதிராக இன்றும் போராட்டம்
தம்புள்ள பள்ளிவாசல் தாக்கப்பட்டதைக் கண்டித்து இன்று சென்னையிலுள்ள இலங்கை துணை தூதரகத்தை முற்றுகையிட முயன்ற விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் உட்பட 150 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தம்புள்ள பள்ளிவாசல் தாக்கப்பட்டதைக் கண்டித்து சென்னையில் உள்ள இலங்கை துணை தூதரகத்தை முற்றுகையிடப் போவதாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் அறிவித்திருந்தார். இதைத்தொடர்ந்து இன்று காலை முதல் துணைத் தூதரகம் முன்பு விடுதலைச் சிறுத்தைகள் குவியத் தொடங்கினர்.
முற்பகல் 11.30 மணியளவில் தூதரகம் முன்பாக வந்துசேர்ந்த தொல். திருமாவளவன் தமது தொண்டர்களுடன் தூதரகத்தை நோக்கி முற்றுகையிடச் சென்றார். முற்றுகைப் பேரணியின்போது சிங்களவர்களுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர். ஆனால், அவர்களைக் காவல்துறையினர் சிறிது தொலைவில் தடுத்து நிறுத்தி கைதுசெய்தனர்.
இப்போராட்டத்தில ஈடுபட்ட திருமாவளவன் உட்பட 150 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இந்தப் போராட்டத்தின்போது இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ மற்றும் இலங்கையின் தேசியக் கொடியும் தீ வைத்து கொளுத்தப்பட்டன.

ராஜ பக்ச , ஒரு முறை தொல்லைசந்திக்கும் போது நக்கல் அடித்தார் ,அதற்கு பழிவாங்கவே இந்த முஸ்லிம் ஆதரவு
ReplyDeleteநாடகம். ஈழ தமிழர்களை ஏமாற்றுவதுடன் நிறுத்திக் கொள்ளவும் .
Meeran