Header Ads



அமெரிக்காவின் இராணுவ முகாம் நிச்சயம் இலங்கையில் ஸ்தாபிக்கப்படும்

இலங்கை அரசாங்கம் சீனாவுடனான நட்புறவிலிருந்து விலகி அமெரிக்காவுடன் நெருங்கிய நட்புறவை ஏற்படுத்திக் கொள்வதற்கான ராஜதந்திர காய் நகர்த்தல்களை முன்னெடுப்பதாக குற்றம் சாட்டும் தேசப்பற்றுள்ள தேசிய இயக்கம் சரத்பொன்சேகாவை விடுவிக்கும் திட்டத்தை அமெரிக்கா முன்னெடுத்து வருவதாகவும் தெரிவித்துள்ளது.

இத தொடர்பாக தேசப்பற்றுள்ள தேசிய இயக்கத்தின் தலைவர் குணதாஸ அமரசேகர மேலும் தெரிவிக்கையில்,

இந்தியா அமெரிக்கா விரித்த வலையில் அரசாங்கம் சிக்கிக் கொண்டுள்ளது.  அமெரிக்காவின் ராஜாங்க செயலாளர் ஹிலாரி கிளிண்டன் இந்தியாவுக்கு விஜயத்தை மேற்கொண்டுள்ள சூழ்நிலையில், இலங்கையிலிருந்தும் தூதுக்குழுவொன்று இந்தியாவிற்கு விஜயத்தை மேற்கொள்கிறது.
இதன்போது ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை சீன நட்புறவு கொள்கையிலிருந்து முழமையாக பிரித்தெடுக்கும் படலம் முற்றுப்பெறவுள்ளது.

ஏற்கனவே சீனாவுடனான நட்புறவிலிருந்து அரசாங்கம் மெதுமெதுவாக விலகி வருகிறது.இதன் பின்னர் நிச்சயமாக அமெரிக்காவின் இராணுவ முகாம் இலங்கையில் ஸ்தாபிக்கப்படும். இதன் பின்னர் சரத் பொன்சேகா விடுதலைக்கான காய்நகர்த்தல்களை அமெரிக்கா மேற்கொள்வதோடு அதற்கான பாரிய அழுத்தத்தை ஜனாதிபதியின் மீது பிரயோகிக்கப்படும்.

சிங்கள, பௌத்தர் என்ற முத்திரையின் கீழ்சரத் பொன்சேகாவை விடுவித்து அதன் பின்னர் பொன்சேகாவை ஆட்சிக்கு கொண்டு வந்து வடக்கு கிழக்கில் தமிழ்மக்களை ஒழிக்கும் செயற்பாடுகளை நிறைவேற்றி அதனை இனச் சங்காரம் எனக் காரணம் காட்டி இலங்கையை அமெரிக்கா இரண்டாகப் பிரிக்கும்.  அச்சதித் திட்டம் தொடர்பான கலந்துரையாடல்களை இந்தியாவுடன் மேற்கொள்ளவே ஹிலாரி கிளின்டன் புதுடில்லி வந்துள்ளாரென்றும் குணதாச அமரசேகர தெரிவித்தார்

No comments

Powered by Blogger.