Header Ads



முஸ்லிம்களும், அறபிகளும் போராட்ட வீரா்களாக இருக்கவேண்டும் - யூசுப் அல் கர்ளாவி

இஸ்ரேல் பலஸ்தீன நிலத்தில் குடியேற்றங்களை விஸ்தரிப்பது ஆபத்தானது என சா்வதேச முஸ்லிம் அறிஞா்கள் ஒன் றியத்தின் தலைவா் கலாநிதி யூசுஃப் அல்- கர்ளாவி தெரிவித்துள்ளார். இஸ்ரேல் மஸ்ஜிதுல் அக்ஸாவை அழித்து குத்ஸை யூத மயப்படுத்தும் திட்டத்தை தொடா்வதை தடுப்பதற்காக ஓன்றிணையுமாறு அவா் அறபு ஆட்சியாளா்களை வேண்டிக் கொண்டார்.

கட்டாரில் அமைந்துள்ள உமா் இப்னு கத்தாப் பள்ளிவாயிலில் நிகழ்த்திய குத்பா பிரசங்கத்திலேயே அவா் இதனைக் குறிப்பிட்டார். அறபிகளும் முஸ்லிம்களும் போராட்ட வீரா்களாக இருக்கவேண்டும். ஒருபோதும் அவா்கள் இழிவை அங்கீகரிக்கக் கூடாது எனவும் அவா் கேட்டுக்கொண்டார்.

உலகம் முழுவதும் உள்ள யூதர்கள் செல்வத்தாலும் அரசியலாலும் ஆயுதத்தாலும் ஊடகங்களாலும் இஸ்ரேலுக்கு உதவிக் கொண்டிருக்கும்போது நாம் பலஸ்தீன சகோதர்களுக்கு உதவி செய்யாதவா்களாக இருக்கிறோம் என அவா் கவலைப்பட்டார்.

இஸ்ரேல் அழிந்து போவதும் குத்ஸும் மஸ்ஜிதுல் அக்ஸாவும் மீட்கப்படுவதும் நிச்சயம் எனவும் அவா் குறிப்பிட்டார் ”இஸ்ரேலியா்கள் நிச்சயம் அழிந்துபோவர். பலஸ்தீனத்தைவிட்டு அவா்கள் வெளியேற்றப் படுவா். அத்தினத்தையே முஸ்லிம்களாகிய நாம் எதிர்பார்த்து காத்திருக் கிறோம் எனவும் அவா் குறிப்பிட்டார்.

3 comments:

  1. கர்லாவியின் இஸ்ரேலின் கருத்து மதிக்ககூடியது.
    ஆனால் கட்டார் அமீர் முன்னிலையில் அந்நியபெண்னின் கையை குலுக்குவது இஸ்லாத்தில் சரியா? நீங்கள் வசிக்கும் கட்டார் அமெரிக்க யூத எடுபிடி நாடுதானே.. DAOUD THARIK

    ReplyDelete
  2. சும்மா சொல்வது, செய்வதை விட மிகவும் எளிது.
    கர்ளாவியின் நிலையும் இதுதான்.

    ReplyDelete

Powered by Blogger.