இலங்கையில் உளவுபார்த்த அமெரிக்கா - ஹிலாரி கிளின்டன் அனுமதி வழங்கியிருந்தாராம்
அமெரிக்காவின் புலனாய்வு பிரிவான சீ.ஐ.ஏ. எப்.பி.ஐ காவற்துறை மற்றும் அமெரிக்க புலனாய்வு நிறுவனம் என்பன இலங்கை தொடர்பான புலனாய்வு தகவல்களை திரட்டி வந்துள்ளதாக விக்கிலீக்ஸ் இணையத்தளம் முதல் முதலாக செய்தி வெளியிட்டுள்ளது. ரகசியமானது என்ற தலைப்பில் இந்த புலனாய்வு பணிகளை செய்வதற்கான அனுமதியை அமெரிக்க வெளிவிவகார ராஜாங்க செயலாளர் ஹிலாரி கிளின்டன் வழங்கியிருந்தார்.
இலங்கைக்கு ஆதரவு வழங்கிய ஐக்கிய நாடுகள் அமைப்பில் பணியாற்றும், ரஷ்ய, சீன நாடுகளின் பிரதிநிதிகள் தொடர்பான தகவல்களையும் இவர்கள் திரட்டியுள்ளனர். முக்கியமாக இலங்கை அரசாங்கத்தின் செயற்பாடுகள் குறித்து கண்காணிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்க அரசாங்கத்தின் இந்த நடவடிக்கை பற்றி இலங்கை அரசாங்கத்திற்கு தகவல்கள் கிடைத்திருக்கவில்லை.
ஜெனிவாவில் ,லங்கைக்கு எதிரான யோசனை நிறைவேற்றப்படும் முன்னர் இந்த புலனாய்வு தகவல்களை திரட்டும் பணிகள் நடந்துள்ளதாக விக்கிலீக்ஸ் தெரிவித்துள்ளது.
Post a Comment