துருக்கியில் முதன்முறையாக சிவில் அரசியலமைப்பு வரையப்படுகிறது
துருக்கியில் முதல் முறையாக முழுமையான சிவில் அரசியலமைப்பு வரையப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதற்கான நடவடிக்கைகளை துருக்கி பாராளுமன்ற குழு ஆரம்பிக்கவுள்ளதாக அந்த நாட்டுத் தகவல்களை மேற்கோள்காட்டி பி.பி.சி செய்தி வெளியிட்டுள்ளது.
30 வருடங்களின் முன்னர் இராணுவ ஆட்சியாளர்களால் வரையப்பட்ட தற்போதுள்ள அரசியலமைப்பில் ஜனாநாயக மாற்றங்கள் ஏற்படுத்தப்படவுள்ளன.
தற்போதுள்ள அரசியலமைப்பின் பிரகாரம் இராணுவத்தினருக்கு அதிக அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளதுடன், தனிநபர் மற்றும் சிறுபான்மையினர் உரிமைகள் மறுக்கப்பட்டிருந்தது. இந்த ஆண்டு இறுதியில் புதிய அரசியலமைப்பு வரையப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக பி.பி.சி செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Post a Comment