Header Ads



ஆப்கானிலிருந்து ஒபாமா புறப்பட்டுச் சென்று, ஒரு மணிநேரத்தில் தலிபான்கள் அதிரடித் தாக்குதல்


அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலுக்கு திடீர் விசிட்டை மேற்கொண்டார். காபூல் சென்ற ஒபாமா, அதிபர் ஹமீத் கர்ஸாய் உடன் கூட்டு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார். இந்நிலையில் ஒபாமா ஆப்கானை விட்டு வெளியேறிய ஒரு மணிநேரத்தில் 3 இடங்களில் குண்டுவெடித்துள்ளது.

ஜலாலாபாத் சாலையில், வெளிநாட்டு ராணுவ மையங்கள் இருக்கும் பகுதியில் கார்குண்டு வெடித்ததாக காபூல் போலீஸ் தலைவர் அய்யூப் சலாங்கி AFP செய்தி நிறுவனத்திடம் தெரிவித்துள்ளார். ஆப்கான் தாலிபான் இத்தாக்குதலுக்கான பொறுப்பை ஏற்றுக்கொண்டுள்ளது.

இதுக்குறித்து தாலிபான் செய்தி தொடர்பாளர் ஸபிஹுல்லாஹ் முஜாஹித் ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திற்கு தொலைபேசி மூலம் அளித்த செய்தியில், “எங்கள் முஜாஹிதீன்களில் ஒருவர் ராணுவ தளத்திற்கு முன்னால் காரை வெடிக்கச் செய்தார். மீதமுள்ள முஜாஹிதீன்கள் உள்ளே சண்டையிடுகின்றனர். ராணுவத்திற்கு இந்த தாக்குதல் பெரும் இழப்பை ஏற்படுத்தியுள்ளது.” என்று கூறியுள்ளார்.

தாக்குதல்களில் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து உடனடியாக தகவல் எதுவும் கிடைக்கவில்லை. காபூல் முக்கிய விமானநிலையம் அருகே புகை மேலே கிளம்பியதாகவும், இரண்டு பேர் காயமடைந்து, ஒரு பெண்மணிக்கு கடுமையான தீக்காயம் ஏற்பட்டதையும் கண்டதாக AFP ஃபோட்டோக்ராபர் கூறுகிறார்.

அல்குவைதா இயக்க தலைவர் பின் லேடனின் முதலாம் ஆண்டு நி‌னைவு தினத்தில் ஆப்கானில் குண்டு வெடிப்பு நிகழ்‌ந்தது. இதில் அதிர்ஷ்டவசமாகஅமெரிக்க அதிபர் ஒபாமா உயிர் தப்பினார்.

அல்குவைதா இ‌யக்கத்தினர் ஆப்கானிஸ்தானில் ஆதிக்கம் செலுத்தி வரும் நிலையில் அதன் முன்னாள் தலைவர் பின்லேடனின் முதலாம் ஆண்டு நினைவு தினம் அவ் வியக்கத்தினரால் அனுஷரிக்கப்பட்டது. இந்நிலையில் அமெரிக்க அதிபர் ஒபாமா ரகசிய பயணமாக ஆப்கான் சென்றிருந்தார்.அங்கு தலைநகர் காபூலில் அதிபர் ஹர்சாயை சந்தித்து நிதியுதவி , மற்றும் படைகளை படிப்படியாக குறைப்பது உட்பட பல்வேறு ஆலோசனைகள் மற்றும் ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டனர். ‌தொடர்ந்த அமெரிக்க ராணுவத்தினரின் மத்தியில் பேசிய அதிபர் இந்தாண்டு இறுதிக்குள் படைகள் படிப்படியாக வாபஸ் பெறப்படும் என கூறினார்.

அல்குவைதா இயக்கத்தின் முன்னாள் தலைவர் பின்லாடனின் நினைவு தினத்தை முன்னிட்டு  திடீர் தாக்குதலி்ல் ஈடுபடக்கூடும் என அமெரிக்க உளவுத்துறை ஆப்கானிஸ்தானின் போலீசாருக்கு எச்சரிக்கை விடுத்திருந்தது.

No comments

Powered by Blogger.