பௌத்த கொடியை அவதூறாக பயன்படுத்துபவர்கள் மீது சட்ட நடவடிக்கை
பௌத்த கொடியை அவதூறாக பயன்படுத்துபவர்கள் மீது சட்ட நடவடிக்கையை மேற்கொள்வதற்கென சுற்றறிக்கைகளை பிரதேச செயலாளர்களுக்கும் அனைத்து பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரிகளுக்கும் அரசாங்கம் வழங்கியுள்ளது. தானசாலைகள் மற்றும் வெசாக் கொண்டாட்டங்களின் போது பௌத்த கொடியினை மரியாதை குறைவாக பயன்படுத்துவோர் மீது பொலிஸ் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
தானசாலைகளுக்கும் வாகனங்களை நிறுத்துவதற்கும் பௌத்த கொடி பயன்படுத்தக் கூடாதென்றும் அதற்கு பதிலாக மஞ்சள் கொடிகளை பயன்படுத்த வேண்டும் என தானசாலை ஏற்பாட்டாளர்களை அறிவுறுத்துமாறு சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இம்மாதம் இரண்டாம் திகதியிலிருந்து 8 ஆம் திகதிவரையான ஒருவாரக் காலப்பகுதி வெசாக் வாரமாக கொண்டாடப்படுமென அரசாங்கத்தால் உத்தியோக பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment