Header Ads



அமெரிக்காவின் அரசியல், பாதுகாப்பு அதிகாரிகள் இலங்கையில்

அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் உயர்மட்ட அரசியல் - பாதுகாப்பு அதிகாரிகள் குழுவொன்று  இலங்கைக்கு பயணம் மேற்கொண்டுள்ளது.

அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் அரசியல் – இராணுவ விவகாரப் பிரிவின் திட்டமிடல், நிகழ்ச்சி மற்றும் நடவடிக்கைகளுக்கான பிரதி உதவிச்செயலர் மேஜர் ஜெனரல் வோல்டர் ஜிபன் தலைமையிலான உயர் மட்டக்குழுவே இலங்கைக்கு  பயணம் மேற்கொண்டிருந்தது.

இந்தக் குழுவில் இராஜாங்கத் திணைக்களத்தின் அரசியல் – இராணுவ விவகாரப் பிரிவைச் சேர்ந்த நிகழ்ச்சி ஆய்வாளர் ஆன் நெல்சன், உதவி நிகழ்ச்சி முகாமையாளர் கதே மக் பர்லன்ட் ஆகியோரும் இடம்பெற்றுள்ளனர்.

இவர்கள் கடந்த 26ம் நாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்சவை சந்தித்துப் பேசியுள்ளனர். அத்துடன் நேற்று முன்தினம் கடற்படைத் தளபதியுடனும் இவர்கள் கலந்துரையாடியுள்ளனர்.

இலங்கை உயர்மட்ட பாதுகாப்பு அதிகாரிகளையும் அமெரிக்கக் குழுவினர் சந்தித்துள்ளதாகவும், பல்வேறு பகுதிகளுக்கும் சென்று நிலைமைகளை மதிப்பீடு செய்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

No comments

Powered by Blogger.