Header Ads



பாகிஸ்தான் ராணுவ வீரர்களின் தலைகளை துண்டித்து மரக்கம்பத்தில் தொங்கவிட்ட தலிபான்கள்

பாகிஸ்தானில் வடக்கு வசிரிஸ்தான் பகுதியில் பழங்குடியினர் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் தலிபான்கள் மற்றும் அல் கொய்தா அமைப்பினர் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர். அமெரிக்க படைகள் இப்பகுதியை தலிபான்கள், அல் கொய்தா அமைப்பினர் சொர்க்க பூமி என்று வர்ணிக்கிறது. இப்பகுதில் இருக்கும் தலிபான்கள் அடிக்கடி இராணுவத்தினருடன் சண்டையில் ஈடுபட்டு வருகிறார்கள்.

இந்நிலையில் நேற்று தலிபான்களுக்கும் ராணுவ வீரர்களுக்கும் இடையே நடைபெற்ற சண்டையில் 9 ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர். இதை தொடர்ந்து மிரன்ஷா பகுதியில் நடந்த தேடுதல் வேட்டையின்போது ராணுவ வீரர்களுக்கும் தலிபான்களுக்கிடையே மீண்டும் சண்டை ஏற்பட்டது.

இச்சண்டையில் மேலும் மூன்று ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர். இரு ராணுவ வீரர்களை பிடித்த தலிபான்கள் அவர்களின் தலைகளை துண்டித்து, வெட்டப்பட்ட தலைகளை மரக்கம்பத்தில் தொங்கவிட்டனர்.

No comments

Powered by Blogger.