முஸ்லிம்களே..! தம்புள்ள பள்ளியை அகற்றுவதில்லை என்பதில் உறுதியாக நில்லுங்கள் - அமைச்சர் ஜனக பண்டார
சஞ்சாரி
அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா மற்றும் அகில இலங்கை முஸ்லிம் லீக் வாலிப முன்னணிகளின் சம்மேளனத் தூதுக்குழு ஒன்று கடந்த வியாழனன்று காணி, காணிஅபிவிருத்தி அமைச்சர் ஜனக பண்டார தென்னகோனை கொழும்பிலுள்ள அவரது இல்லத்தில் சந்தித்து தம்புள்ளை பள்ளிவாசல் தொடர்பான பிரச்சினை பற்றி உரையாடியுள்ளது.
அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா மற்றும் அகில இலங்கை முஸ்லிம் லீக் வாலிப முன்னணிகளின் சம்மேளனத் தூதுக்குழு ஒன்று கடந்த வியாழனன்று காணி, காணிஅபிவிருத்தி அமைச்சர் ஜனக பண்டார தென்னகோனை கொழும்பிலுள்ள அவரது இல்லத்தில் சந்தித்து தம்புள்ளை பள்ளிவாசல் தொடர்பான பிரச்சினை பற்றி உரையாடியுள்ளது.
பள்ளிவாசல் நீண்டகால வரலாற்றினையுடையது என்று பல உதாரணங்களை எடுத்துக்கூறி விளக்கினர்.
அமைச்சர் ஏ.எச்.எம். பௌசி 1975ல் ஒரு முறை கட்சி கூட்டம் ஒன்றுக்காக அவர் எனது வீட்டுக்கு வந்திருந்தார். அது நோன்பு காலம். நோன்பு திறப்பதற்கு பள்ளிவாசலுக்குப் போக வேண்டும் என்றார். அவருடன் நானும் அப்பள்ளிவாசலுக்கு முதன் முறையாகச் சென்றேன்.
அப்போது பள்ளிவாசல் சிறியதாகவே இருந்தது. நான் பள்ளிவாசல் நம்பிக்கையாளர்களிடம் ஏன் இந்தப் பள்ளிவாசலை இப்படி வைத்திருக்கிறீர்கள் நன்றாக கட்டுங்கள் என்று ஆலோசனை தெரிவித்தேன்.
அப்போது பள்ளிவாசல் சிறியதாகவே இருந்தது. நான் பள்ளிவாசல் நம்பிக்கையாளர்களிடம் ஏன் இந்தப் பள்ளிவாசலை இப்படி வைத்திருக்கிறீர்கள் நன்றாக கட்டுங்கள் என்று ஆலோசனை தெரிவித்தேன்.
எனது தொகுதியில் பள்ளிவாசல் ஒன்று அப்படியிருப்பதனை நான் விரும்பாததாலே அப்படிச் சொன்னேன். இந்தப் பள்ளிவாசல் விடயத்தில் நான் உறுதியாக இருக்கின்றேன். அதே போன்று நீங்களும் உறுதியாக இருக்க வேண்டும் என்றார். நானும் தம்புள்ளை மக்களும் உறுதியாக இருக்கும்போது உங்கள் தலைவர்கள் சிலர் மறுபக்கமாகப் பேசியது கவலையை அளிக்கின்றது என்றார்.
அகில இலங்கை ஜம்மியத்துல் உலமாவின் தலைவர அஷ்ஷேக் ரிஸ்வி முப்தி உண்மையின் பக்கம் அமைச்சர் இருப்பதற்கு சமூகத்தின் சார்பில் நன்றி தெரிவித்தார்.
மௌலவி எம்.எஸ்.எம். தாஸிம், முஸ்லிம் லீக் வாலிப முன்னணியின் பொருளாளர் சாம் நவாஸ், தேசிய அமைப்பாளர் எஸ்.எம்.எம். இம்தியாஸ் மற்றும் முஹம்மத் நஸீர், உலமாக்கட்சித் தலைவர் முபாரக் அப்துல் மஜீதும் இதில் பங்குபற்றினர்.
இந்த அ மைச்சருக்கு உள்ள துணிவு நமது முஸ்லிம் அமைச்சர்மார்களுக்கு இல்லையே
ReplyDeleteசேற்றில் சில செந்தாமரைகள் இருக்கும்-அதில் நீங்களும் ஒன்று அமைச்சரே-அதே போல மந்தையில் சில கறுப்பு ஆடுகளும் இருக்கும்-அதுக்கு எங்களின் சில தலைவர்கள் உதாரணம்-இறைவன் உங்களுக்கு ஹிதாயத்து வழங்குவானாக
ReplyDeleteThank you sir.
ReplyDeleteமுஸ்லிம்களுடன் தொடர்பில்லாத இஸ்லாத்தை பிழையாக விளங்கிய ஒரு சில பெரும்பான்மையினர் செய்யும் அட்டகாசம் பிழையானது
ReplyDeleteஎன்று பெரும்பான்மையின நண்பர்கள் சொல்வதும் சரிதான்
அமைச்சர் அவர்களே ,ஒரு நாட்டின் குடி மகன் எப்படி இருக்கவேண்டும் என்பதற்கு நீங்கள் நல்ல உதாரணமாக வாழ்ந்து கொண்டிருக்கிறீர்கள் .உங்கள் மாவட்டத்தில் வசிப்பவர்களை முதலில் மனிதர்களாக மட்டும் பார்க்கிறீர்கள் என்று இதிலிருந்து தெரிகிறது .இன ,மத, மொழி வேறுபாடின்றி உங்கள் சேவையை தொடர ஸ்ரீ லங்கா மக்களாகிய எங்களின் துஆ உங்களுக்கும் குடும்பதவர்களுக்கும் ,உங்களைப் போன்ற நல் உள்ளம் கொண்டவர்களுக்கும் இருக்கிறது என்பதை மறவாதீர்கள் .
ReplyDeleteDaoud Tharik
முஹம்மது நபியின் ஹதீஸ் அடிப்படையில் அநீதியின் பக்கம் நிற்காமல் நீதியின் பக்கம் நின்ற அமைச்சருக்கு நன்றி.
ReplyDeleteSorry en udan Tamil font illai.
ReplyDeleteIdu pol sambavamgal pala idam gelil thodara laam, athuku naam thayaar aki varanum, pesi pesi irrukamal udaney thyar akavum.