வழுக்கை எலிக்கு முடி முளைக்குது - ஸ்டெம்செல் ஆராய்ச்சி வெற்றி
வழுக்கை தலையில் முடி முளைக்க வைப்பது தொடர்பாக ஜப்பான் ஆராய்ச்சியாளர்கள் நடத்திய ஸ்டெம்செல் ஆராய்ச்சி வெற்றிகரமாக முடிந்துள்ளது. வழுக்கை எலிக்கு முடி முளைத்திருக்கிறது. உலகம் முழுவதும் சராசரியாக 25 சதவீத ஆண்கள் 30 வயதுக்குள் வழுக்கை ஆகின்றனர். மற்றவர்கள் 60 வயதுக்குள் ஆகின்றனர். வயது மட்டுமின்றி பரம்பரை, அதிக வேலைச்சுமை, டென்ஷன், மன அழுத்தம், சுற்றுச்சூழல் என பல காரணங்கள் இருக்கின்றன.
இந்நிலையில், ஸ்டெம்செல் உதவியுடன் வழுக்கை தலையில் முடி முளைக்க வைப்பது தொடர்பான ஆராய்ச்சியில் ஜப்பானின் டோக்கியோ பல்கலையில் உள்ள சுஜி அறிவியல், தொழில்நுட்ப ஆய்வு மையத்தை சேர்ந்த விஞ்ஞானிகள் ஈடுபட்டனர். எலிகளை வைத்து இந்த ஆராய்ச்சி நடந்தது. ஸ்டெம்செல்லில் இருந்து முடி வளர்ச்சிக்கு தேவையான ஃபோலிக்கிள் எனப்படும் பகுதிப் பொருள் மட்டும் எடுக்கப்பட்டு, வழுக்கை எலியின் தலையில் பொருத்தப்பட்டது. இந்த ஆராய்ச்சிக்கு வெற்றி கிடைத்திருக்கிறது. எலியின் தலையில் வழக்கம்போல முடி முளைப்பதாக ஆராய்ச்சி டீம் தலைவர் டகாஷி சுஜி கூறியுள்ளார்.
Post a Comment