ஜெனீவாவில் வக்காளத்து வாங்கிய முஸ்லிம்களுக்கு இந்நிலையா..? சுமந்திரன் எம்.பி. கேட்கிறார்..!
தம்புள்ள பள்ளிவாசல் தாக்குதல் சம்பவமானது சகலருடைய மனதையும் புண்படுத்துவதாய் அமைந்திருந்தது. பத்திரிகைச் செய்தியொன்றில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையழில் அரசாங்கத்திற்கு ஆதரவு பெற்றுக்கொடுத்ததற்கான கைமாறு இதுதானா, என ரவூப் ஹக்கீம் கேள்வியெழுப்பியிருந்தார்.
ஜெனீவாவில் இலங்கை அரசாங்கத்திற்கு வெளிப்படையாகவே வக்காளத்து வாங்கி ஒருமாதம் நிறைவடைய முன்னரே அவர்களின் சமூகுத்திற்கே இவ்வாறான நிலையென்றால் ஜெனீவா தீர்மானத்திற்கு ஆதரவு தேடும் வகையில் செயற்பட்டவர்களுக்கு எவ்வாறான நிலையேற்படும்? சிந்தித்துப் பார்க்கவே முடியாதுள்ளதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் எம்.பி. தெரிவித்துள்ளார்.
தொழிற்சங்கவாதி மர்ஹும் ஏ. அஸீஸின் நினைவுதின நிகழ்வு அண்மையில் கொழும்பில் நடைபெற்றபோதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில் தெரிவித்துள்ளதாவது,
ஒரு சமூகம் பாதிக்கப்படும் போது மற்றொரு சமூகும் இது எங்களுக்கில்லை அவர்களுக்குத்தானே என்று ஒதுங்கியிருக்கும் நிலையே இன்று காணப்படுகிறது. இன்று நடைபெறும் மனித உரிமை மீறல்களுக்கு இன, மத, சாயம் பூசி ஏனைய சமூகத்தினர் தலையிடாத வண்ணம் செய்துவிடுகின்றனர். சரியான சிந்தனை உள்ள மக்கள் எச்சமூகமானாலும் ஒன்று சேர்ந்து எழுந்து நிற்பார்களானால் அடகு;குமறைகள் நடப்பதற்கு வாய்ப்பில்லை எனவும் இவர் இதன்போது தெரிவித்தார்.
Fahim-Kandy
ReplyDeleteModalai Kanneer wdikkatheer.
Yaal Kuda Nattil LTTE Muslim Masjidkalai Udaikkum podu Neer Enkey Irundheer?