Header Ads



தம்புள்ள பள்ளிவாசலுக்காக கருணாநிதி முதலைக்கண்ணீர் வடிக்கிறார் - அஸ்வர் எம்.பி.

TV

அயோத்திய நகரில் பாபர் மசூதி இடித்துத்தள்ளப்பட்டபோது மெளனம் காத்த தி.மு.க தலைவர் முத்துவேல் கருணாநிதி தம்புள்ளை பள்ளிவாசல் விவகாரத்தில் முதலைக் கண்ணீர் வடிப்பது ஏன்? இவ்வாறு ஏ.எச்.எம். அஸ்வர் எம்.பி கேள்வி எழுப்பி யுள்ளார்.

நேற்று முன்தினம் அளுத்கடையில் நடைபெற்ற முஸ்லிம்களுடனான கலந்துரையாடல் நிகழ்வொன்றில் உரையாற்றிய அஸ்வர் எம்.பி, தமிழகத்தில் மீண்டும் அதிகாரத்துக்காக வருவதற்காகவும், முதல்வர் ஜெயலலிதாவின் அரசியல் தந்திரங்களை தவிடு பொடியாக்கு வதற்காகவும் தான் சிறுபான்மை மக்களின் பாதுகாவலன் எனக் காட்டிக் கொள்ள முயற்சிக்கின்றார்.

கருணாநிதியின் இந்த நடவடிக்கை சர்வதேச சதித்திட்டத்தின் ஓர் அங்கமே. வடக்கு மாகாணத்தில் முஸ்லிம்கள் இரவோடிரவாக விரட்டப்பட்ட போதும், காத்தான்குடி, ஏறாவூரில் பள்ளிவாசல்களில் முஸ்லிம்கள் படுகொலை செய்யப்பட்டபோதும் வாளாவிருந்த கலைஞர், இப்போது முஸ்லிம்களுக்காக நீலிக்கண்ணீர் வடிப்பது தான் புதிராகவுள்ளது.

தம்புள்ளை பள்ளி விவகாரத்தில் முஸ்லிம் அமைச்சர்களும், மக்கள் பிரதிநிதிகளும் ஆக்க பூர்வமான நடவடிக்கையில் ஈடுபட்டு வரு கின்றனர். அரசாங்கமும் ஜனாதிபதியும் இதற் கான தீர்வைப் பெற்றுத்தருவரென முஸ்லிம்கள் பெரிதும் நம்புகின்றனர். எனவே இறைமையுள்ள இந்நாட்டின் உள் விவகாரங்களில் கலைஞர் மூக்கை நுழைப்பது ஆரோக்கியமானதல்ல என்று அஸ்வர் எம்.பி தெரிவித்தார்.

6 comments:

  1. பிரேமதாசாவுக்கு சேர்விஸ் செய்து விட்டு இப்போது மகிந்கவுக்கு ஸர்விசா சுயநல அரசியல் வேண்டாம் எல்லாமே ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள்

    ReplyDelete
  2. KARUNANITHIYAI NAMBALAM ANAL A,H,M, ASWAR ENBAVARAI EPPADI NAMBUVATHU?

    ReplyDelete
  3. mahir paris1606/05/2012, 18:21

    1990 ஆம் ஆண்டு முஸ்லிம்களை துரத்தியபொழுது வாய் திறக்காத கருணாநிதி இப்போது வாய் திறப்பது தமிழ்நாடு முஸ்லிம்களை திருப்தி படுத்தவும் ஸ்ரீலங்கா முஸ்லிம்களையும் சிங்களவர்களையும் முட்டிவிடத்தன்

    ReplyDelete
  4. sariyana waarthai soneerhal brother,kadal karayil ulla manal alla layakku illatha aswar MP aal kadal meen pidikka {mr.karuna nidi}paakirar....thappu ma thappuoooooooooooooo

    ReplyDelete
  5. Mr. Azwar mp you should not talk about dambulla musque. you have no rights to talk. you should prey mr. rajapaksha also your prayer room white house so please you stop comments about mosque ok.

    ReplyDelete
  6. pease do not open your mouth azwar.

    ReplyDelete

Powered by Blogger.