இலங்கை தொழிலாளர்கள் நலன் காக்குமாறு குவைத் நாட்டிடம் கோரிக்கை
குவைத் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள வீட்டு பணியாளர் தொடர்பிலான சட்டமூலத்தை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என குவைத்திலுள்ள இலங்கை தூதுவர் சீ.ஏ.எச்.எம். விஜேரட்ன கோரியுள்ளார்.
இலங்கையில் இருந்து குவைத் செல்லும் பணியாளர்கள் அங்கிருந்து சவுதி அரேபியா போன்ற நாடுகளுக்கு தப்பி செல்வதாக அவர் தெரிவித்துள்ளார்.
குவைத் பணியாளர்கள் துன்புறுத்தப்படுதல் மற்றும் கொடுப்பனவுகள் வழங்கப்படாமை போன்ற காரணங்களாலேயே அவர்கள் இவ்வாறு செயற்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
முறையான தொழிலாளர் சட்டம் இல்லாத நிலையில் இந்த பிரச்சினையை தீர்க்க முடியாது என சுட்டிக்காட்டியுள்ள அவர், இதன் பொருட்டு தற்போது நாடாளுமன்றத்தில் விவாதத்தில் உள்ள வீட்டுப் பணியாளர்கள் தொடர்பிலான சட்ட மூலத்தை அமுலாக்க வேண்டும் எனவும் கோரியுள்ளார்.

Post a Comment