குவைத்தில் தம்புள்ள பள்ளிவாசல் தாக்குதல் விழிப்புணர்வு கூட்டம்
தம்புள்ளை பகுதியில் உள்ள முஸ்லிம்கள் தொழுகை நடத்திக் கொண்டிருந்த இறை இல்லத்தில் மத வெறிகொண்ட புத்த பிக்குகள் வெறியாட்டத்தில் இறங்கி அப்பள்ளியை சேதப்படுத்தியதை கண்டிக்கும் விதமாகவும் இக்கண்டனத்தை இலங்கை அரசுக்கு எடுத்துச் செல்லும் விதமாகவும் ஒரு விழிப்புணர்வு கூட்டத்திற்கு குவைத் மண்டலம் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கடந்த 27-4-2012 அன்று வெள்ளிக்கிழமை மக்ரிப் தொழுகைக்கு பிறகு முர்காப் பகுதியில் உள்ள மனோ சல்வா உணவகத்தில் ஏற்பாடு செய்திருந்தது.
மண்டல செயலாளர் சகோ கூத்தாநல்லூர் ஜின்னா தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் ஆரம்பமாக சகோதரர் இலங்கை ஒட்டமாவடி ஃபாஹிர் துவக்க உரை நிகழ்த்தினார். அதைத் தொடர்ந்து மண்டல தலைவர் சகோதரர் கூனிமேடு ராஜா உணர்ச்சிமிகு சிறப்புரையாற்றினார்.
காவி உடையணிந்த புத்த பிக்குகளின் அட்டகாசங்களை பட்டியலிட்டு இலங்கை முஸ்லிம்களின் இன்றைய நிலையை விளக்கினார். இலங்கை பைரோஸ் 'காக்க வேண்டிய பள்ளிகளும் கற்க வேண்டிய பாடமும்' என்றதலைப்பில் எழுச்சி உரை நிகழ்த்தினார்.
சகோதரர் பைரோஸ் தனது உரையில் தம்புள்ளை பள்ளிவாசலின் வரலாறை எடுத்து விளக்கியோதோடு இதுவரை இலங்கையில் முஸ்லிம்கள் பட்ட அவலங்களையும், பறிகொடுத்த பள்ளிகளையும் பற்றி விவரித்து இனிமேலாவது நாம் பாடம் படிக்க வேண்டும் இல்லையெனில் இலங்கையில் ஒரு காலத்தில் முஸ்லிம்கள் வாழ்ந்தார்களா? என்ற நிலை வந்துவிடும் என்று தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்.
அதைத் தொடர்ந்து குவைத்தில் உள்ள இலங்கையைச் சேர்ந்த முஸ்லிம்கள், பௌத்தர்கள், கிறிஸ்தவர்கள் மற்றும் இந்து மக்கள் அனைவரிடமும் அதாவது குறைந்த பட்சம் இரண்டாயிரம் பேரிடம் இந்த சம்பவத்தை கண்டிக்கும் விதமாக வாசகம் அடங்கிய பேப்பரில் கையெழுத்து வாங்கி அதை குவைத்தில் உள்ள இலங்கை தூதரகம் மூலமாக இலங்கை அரசுக்கு நமது கண்டனத்தை பதிவு செய்வதென முடிவெடுக்கப்பட்டது.
மேலும் குவைத்தில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாகவும் இலங்கையில் சகோதரர்களாக வாழ்ந்து வரும் முஸ்லிம் மற்றும் பௌத்த மத மக்களுக்கிடையில் மதக்கலவரத்தை தூண்ட நினைக்கும் ஒருசில மத வெறி பிடித்த புத்த பிக்குகளை அடையாளம் காட்டும் விதமாக சிங்களம் மற்றும் தமிழ் மொழியில் பிரசுரம் வெளியிடவும் முடிவு செய்யப்பட்டது.
Post a Comment