Header Ads



இஸ்லாமிய ஞானிகள் என்னை நானே உணர்ந்துகொள்ள வழிகாட்டினார்கள் ஏ.ஆர். ரஹ்மான்


இந்தியாவின் இசை அமைப்பாளர் ஆஸ்கர் நாயகன், ஏ.ஆர். ரஹ்மானுக்கு  அமெரிக்காவிலுள்ள பிரசித்திப் பெற்ற மியாமி பல்கலைகழகம் டாக்டர் பட்டம் வழங்கியுள்ளது.

மேலும், அமெரிக்க அதிபர் ஒபாமா வெள்ளை மாளிகைக்கு வருமாறு ஏ.ஆர். ரஹ்மானுக்கு பிரத்யேக அழைப்பு விடுத்திருந்தார். இச்செய்தியை மியாமி பல்கலைகழகத்தில் பலத்த ஆரவாரத்துக்கிடையே ஏ. ஆர். ரஹ்மான் பார்வையாளர்களிடம் பகிர்ந்துகொண்டார்.

அமெரிக்காவில் உள்ள மியாமி பல்கலைக்கழகம்  ஏ. ஆர். ரஹ்மானுக்கு டாக்டர் பட்டம் வழங்க தீர்மானித்ததையடுத்து கடந்த சனிக்கிழமை அமெரிக்கா சென்றிருந்த ஏ. ஆர். ரஹ்மான்  தனது ரசிகர்களின்  வாழ்த்துகள், பலத்த கையொலிகளுடன் டாக்டர் பட்டம் பெற்றுக்கொண்டார்.

பின்னர் ரஹ்மான் பேசுகையில், "இந்தநேரத்தில் எனது வாழ்க்கையில் முக்கிய திருப்பங்களை ஏற்படுத்தி தந்தவர்களை நன்றியோடு நினைத்துப்பார்க்கிறேன். அமெரிக்க அதிபரும் அவரது குடும்பத்தினரும் தனிப்பட்ட முறையில் கையெழுத்திட்டு என்னை வெள்ளை மாளிகைக்கு வரச்சொல்லி கடிதம் அனுப்பி இருந்தனர்.

எனது தந்தையார், தாயார் என் வாழ்க்கையை ஒழுக்க நெறிகளுடன் செம்மையாக அமைத்துத் தந்தனர். திரையுலகில் ரோஜா படம் மூலம் எனக்கு முதன்முதலாக வாய்ப்பளித்தவர் மணிரத்னம். இஸ்லாமிய ஞானிகள் என்னை நானே உணர்ந்துகொள்ள வழிகாட்டினார்கள். இந்திய ரசிகர்கள் என்னையும், எனது இசையையும் எந்த பாகுபாடும் இல்லாமல் அரவணைத்துக்கொண்டனர். அதேபோன்று ஹாலிவுட்டிலும் என்னை ஏற்றுக்கொண்டிருப்பதை உணர்கிறேன்." என்று  மகிழ்ச்சிப் பொங்கப் பேசினார்.

inneram

8 comments:

  1. ஹராத்துக்கு Dr . பட்டம் .இஸ்லாமிய ஞானிகள் என்றால் யார் இசை அமைப்பவரே ,உங்கள் பார்வையில் தர்காவில்
    கஞ்சா புகைத்துக்கொண்டு ,ஹபுருக்கு பச்சை துணி போர்த்தி பூ தூவி,பாத்திஹா வியாபாரிகளிடம் ஆசி பெற்றா உங்களை நீங்கள் உணர்ந்து கொண்டீர்கள் . தர்காவுக்கெல்லாம் போய் இஸ்லாமியனாக வாழ முடியாது .முதலில் அல்லாஹ்வுக்கு இணை வைப்பதை விட்டு முழுக் குடும்பத்தோடு பாவமன்னிப்பு தேடி இசை என்னும் ஹராத்தை
    விட்டு வெளியில் வாருங்கள் .அல்லாஹ் உங்களைப் போன்ற சினிமாகாரர்களுக்கு நேர் வழிகாட்டுவானாக .உங்கள் அழகான பெயரை அர்த்தமுள்ளதாக மாற்றிக்காட்டுங்கள் .
    Daoud Tharik

    ReplyDelete
  2. ஏ. ஆர். ரஹ்மானை மார்க்க விசயத்திற்கு பேச வேண்டாம். இவர் செய்ற இசை ஹராம், அதுவும் டபுள் மீனிங் பாட்டு, செக்சி நடனம், எல்லாமே ஹராம்.
    இவரு ஒரு சூபி. சூபி வழிகேடு எண்டு இப்ப எல்லா முஸ்லீம்களும் வெளங்கி வார நேரம். இவர பத்தி பேச வேணாம். திருந்த துவா செய்ங்க. செய்தி போடா வேணாம்.

    ReplyDelete
  3. mahir paris1608/05/2012, 13:29

    உலக முஸ்லிம்களை கொன்று குவித்துக் கொண்டிர்க்கும் ஒருவனுடைய வீட்டில் ஒரு முஸ்லிம் விருந்துஉன்ன போகலாமா அதுசரி இவர் முஸ்லிமாக இருந்தல்தால்தானே இவர்களைப்போல் யார் என்ன பெரிய பட்டம் வாங்கினாலும் அதுசம்பந்தமான செய்திகளை போடாமல் இருப்பதுதான் நல்லது

    ReplyDelete
  4. உலகத்திலுள்ள புத்திஜீவிகள் குரான் ,ஹதீஸை படித்து இஸ்லாத்தின் பக்கம் வந்துகொண்டிருக்கிறார்கள் .அதை செய்தியாகப் போடுங்கள் ,தயவு செய்து சினிமாக்கூத்தாடிகள் சம்பந்தமாக செய்திகள் போடாமல் jaffna muslim தவிர்த்துக்கொள்ளுவது நல்லது .இவரை விட அதி உச்சத்தில் இருந்த kate stevanபிரபலமான பாடகர் yoosuf islaam ஆக
    மாறியதை எண்ணிப்பார்ப்பது நல்லது .
    Meeran

    ReplyDelete
  5. மேலே சொன்ன கருத்து வரவேற்கத்தக்கது

    ReplyDelete
  6. நான் படித்ததில் இருந்து!
    இசை அமைப்பாளர் ஏ ஆர் ரஹ்மான் ஒரு இந்து தகப்பனுக்கும் முஸ்லிம் தாய்க்கும் பிறந்தவர். பத்து வயதிற்கு பிறகே தந்தையின் மறைவிற்கு பின் முஸ்லிமாக வளர்க்கப்பட்டவர். அவர் அல்லாஹ்வை விசுவாசிக்கிறார், தொழுகிறார், ஹஜ்ஜு செய்து உள்ளார். மற்றும் ஏழைகளுக்கு உதவுகிறார். தனது நிலை உயர்ந்த போது அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்துகிறார். பணிவு ,தன்னடக்கம், நன்றி உணர்வு உள்ளவர் மேலும் தற்பெருமை அற்றவர். இப்பண்புகள் அனைத்தும் ஒரு தூய இஸ்லாமியனின் பண்புகளாகும். அவர் இசையை தான் வைத்திருக்கிறார், இணை வைக்கவில்லையே? மனங்களை மாற்றக்கூடியவன் அல்லாஹ்.ரஹ்மான்! ஏ ஆர் ரஹ்மானின் விடயத்தில் முடிவெடுக்கட்டும்.
    இங்கு கருத்து பதிபவர்கள் ஏதோ " ஜன்னத்துல் பிர்தௌஸ்" இற்கு விசா வைத்திருப்பவர்கள் போலல்லவா தெரிகிறது.
    நன்றி

    ReplyDelete
  7. ''அவர் இசையை வைத்திருக்கின்றார், இணை வைக்கவில்லையே'' என்று ரெம்ப சிம்பலாக சொல்லி விட்டுப் போறவரே, இசை ஹராம் என்பது உமக்கு தெரியுமா?
    அவர் இணை வைக்கவில்லை என்று நீர் எப்படி சொல்ல முடியும்? உமக்கு தெரியாவிட்டால் சும்மா இருக்க வேண்டியதுதானே.
    தர்காக்களுக்கும், சமாதிகளுக்கும் போய் கை ஏந்தி வழிபட்டு இணை வைக்காமல் உமக்கு துணை செய்கின்றாரா?
    தெரியாவிட்டால் யூ டியூபில் பார்த்துக் கொள்ளவும். தன்னை பகிரங்கமாக சூபி என அறிவித்து சூபிகளின் காலில் விழுந்து கிடக்கும் இவரைப் பற்றி பேச
    உமக்கு என்ன்ன அருகதை இருக்கின்றது? சூபித்துவம் வழிகேடு, இந்து கிரேக்க தத்துவமே சூபித்துவம் என்பது உமக்கு தெரியுமா?

    முதலில் உமக்கு இஸ்லாம் தெரியுமா?
    சுவர்க்கத்துக்கு விசா என்று ஏதாவது இருக்கின்றதா?
    விசா எடுப்பதற்கு சுவர்க்கம் என்றால் என்ன என்று நினைத்துக் கொண்டிருக்கின்றீர்?

    அடுத்து உமக்கு தமிழ் தெரியுமா?
    இங்கே யாரும் இவரை நரகத்துக்கு அனுப்பவோ, சுவர்க்கத்துக்கு அனுப்பவோ கருத்து பதியவில்லை.
    இஸ்லாமிய செய்திகள் என்று இவர் தொடர்பான செய்திகளைப் போடா வேண்டாம் என்று யாழ் முஸ்லிம்
    இணையத் தளத்துக்கு அறிவுரைதான் சொல்லியுள்ளார்கள். புரியாவிட்டால் மீண்டும் படித்துக் கொள்ளும்.


    ''நான் படித்ததில் இருந்து'' என்று எங்கேயோ படித்ததை இங்கே பதிய முன்னர், இங்கே இருப்பதை தெளிவாக படித்துக் கொள்ளவும்.

    ReplyDelete
  8. Alhamdu lilah,I strongly agree for the above coment.please I kindly request to jaffnamuslim.com not to publish these kinds of articles.A.R rahman may be a muslim,he's done hajj,zakah etc.but he is doing shrik,islam says one god that is allah,we should accept one and only allah,but A .R.rahman accepts allah is one of his god(not only Allah)if publishing these kind of articles many people will get him as teir roll model.we pray allah to give him a chance to reform his shirk.

    ReplyDelete

Powered by Blogger.