தம்புள்ள விவகாரம் - ஜெனீவாக்கு கொண்டுசெல்லும் பிரச்சினையல்ல - அமைச்சரவை பேச்சாளர்
நாட்டின் பல்லின மக்களிடையே கருத்து முரண்பாடுகள் நிலவிய போதிலும், ஒரே நாடாக எண்ணி அவற்றிற்கு தீர்வுகாண முயற்சிக்க வேண்டுமென பதில் ஊடகத்துறை அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார்.
அமைச்சரவை தீர்மானங்களை அறிவிப்பதற்கான ஊடகவிலாளர் சந்திப்பின் போது, ஊடகவியலாளர் ஒருவரின் கேள்விக்கு பதிலளிக்கும் வகையில் அமைச்சர் இந்தக் கருத்தினைக் கூறியுள்ளார்.
தம்புள்ளை விவகாரம் ஜெனிவா வரை கொண்டு செல்லப்பட வேண்டிய பிரச்சினை அல்லவெனவும், இந்த விடயம் இறுதியில் எந்தத்திசை நோக்கி தள்ளப்படுகின்றது என்பது தெளிவாவதாகவும் இதன்போது அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன குறிப்பிட்டார்.
எனவே இத்தகைய பிரச்சினைகளை நாட்டு மக்களும், அமைப்புக்களும் மிக அவதானமாக நோக்க வேண்டும் எனவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
இன, மத, குல, பேதங்களின்றி மோதல்கள் ஏற்படாத வகையில் நடந்து கொள்வது அனைத்து பிரஜைகளினதும் பொறுப்பாகும் என்றும் பதில் ஊடகத்துறை அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன மேலும் கூறியுள்ளார்.
அப்படியானால் இந்தப் பிரச்சினையை தீர்க்குமுகமாக(அனைத்து மத மக்களும் ஒற்றுமையாக இருக்க)இந்த மிருகத்தனமான நடவிக்கையில் ஈடுபட்டவர்களுக்கு எதிராக அரசு ஏன் நடவடிக்கை எடுக்காமலிருக்கின்றது?
ReplyDelete