ரகசியங்களைப் பாதுகாக்கும் பலம் மனித மனங்களுக்குக் கிடையாது
அதென்னவோ தெரியவில்லை, தற்போது பலருக்கும் தங்கள் துணை அல்லது காதல் ஜோடியுடன் நெருக்கமாக இருக்கும் தருணத்தை படம்பிடிக்கும் ஆர்வம் அதிகரித்து வருகிறது.
இது பெரும்பாலும் பெண்களை தீராத மனவேதனைக்கும் சோகத்திற்கும் உள்ளாக்குகிறது.
இது பெரும்பாலும் பெண்களை தீராத மனவேதனைக்கும் சோகத்திற்கும் உள்ளாக்குகிறது.
அந்தரங்கத் தருணங்களை கமராவில் பதிவு செய்யும் ஆசை ஆண்களிடம் அதிகரித்து வருகிறது. அது தங்கள் நெருக்கத்தின் அடையாளம் என்று கருதி பெண்களும் அதற்கு அனுமதித்து விடுகிறார்கள். ஆனால், பல நேரங்களில் ஆண்கள் “அதை‘த் தங்கள் நண்பர்களிடம் காட்டி மகிழ்கிறார்கள். இணையத்திலும் ஏற்றுகிறார்கள். செக்ஸ் காட்சிகளான அவைகளை விற்று சிலர் பணமாக்கவும் செய்கிறார்கள். காதலி தன்னைப் பிரிந்துசென்றால் அவளைப் பழிவாங்கவும் அதைப் பயன்படுத்துகிறார்கள்.
மனித மனத்திற்கு இரகசியங்களைபாதுகாக்கும் பலம் கிடையாது. மனித மனம் "ஒரு இரகசியத்தை பாதகாப்பதால் தனக்கு சுவரஸ்யம், சந்தோஷம் அதிகமா? அதை வெளியிடுவதால் தனக்கு சந்தோஷம் அதிகமா?' என்று தனக்குள்ளே அடிக்கடி கேள்வி கேட்கும். அதில் வெளியிடுவதுதான் சந்தோஷம் என்ற முடிவை எடுத்து விடும்போது, தான் பிடித்துவைத்திருக்கும் படங்களை தன்னோடு நட்பில் இருப்பவர்களிடம் காட்டுவார்கள்.
அந்தப் படத்தை அடுத்தவர்களுக்கு காட்டுவதன் மூலம் தனக்கு அழகான காதலி இருப்பது அவளை தான் உறவுகொள்வது அதைப் படம்பிடித்து தன்னை ஒரு சாதனையாளன் போல் காட்டிக்கொள்வது போன்றதெல்லாம் ஈடேறும் என்று நினைப்பார்கள். அப்படி சிலரிடம் அந்தப் படம் பரிமாறப்படும்போது அவர்கள் வேண்டும் என்றோ, அஜாக்கிரதையாலோ அதை பலரும் பார்க்கும் அளவிற்கு இணையங்களில் சேர்த்து விடுகிறார்கள். இதுதான் ஆபத்தாக மாறுகிறது.
தற்போது ஆண்களிடம் செக்ஸ் பலவீனம் அதிகரித்து வருகிறது. அதனால் அவர்கள் தீவிரமான பாலியல் உறவில் ஈடுபடுவதைவிட பார்த்து மகிழ்வதே போதும் என்று நினைக்கிறார்கள். அதனாலும் தன் இணையோடு சேருவதை படம்பிடிக்கிறார்கள். தாங்கள் இணையும் படத்தை பார்த்தே திருப்திப்படுவது அல்லது தூண்டுதல் அடைவது போன்றவை ஆரோக்கிய மான செக்ஸ் அல்ல. அவர்களை ஆராய்ந்து பார்த்தால் அவர்கள் செக்ஸ் பலவீனம் கொண்டவர்களாக இருப்பார்கள். அவர்கள் சிகிச்சை எடுத்து தங்கள் செக்ஸ் வாழ்க்கையை புதுப்பிடித்து“க்கொள்ள வேண்டும்.
என்னிடம் ஆலோசனைபெற ஒரு தம்பதியினர் வந்தனர். நடுத்தர வயது தம்பதிகளான அவர்கள் எப்போதும் பிசியாக தங்கள் வேலையிலே மூழ்கிக்கிடப்பவர்கள். தங்கள் சக்தியை எல்லாம் வேலையிலே செலவிட்டுவிட்டு, சக்தியற்றவர்கள் போல் வீடு திரும்புவார்கள். அதனால் சாப்பிட்டுவிட்டு தூங்கிவிடுவார்கள். மூன்று மாதத்திற்கு ஒரு முறை தான் செக்ஸ் வைத்துக்கொள்வது என்ற நிலைக்கு அவர்கள் தாம்பத்ய வாழ்க்கை சுருங்கிவிட்டது.
அதனால், இருவரும் கலந்துபேசி, தங்கள் செக்ஸ் வாழ்க்கையைப் புதுப்பித்துக்கொள்வதற்காக ஒரு சுற்றுலா தலத்திற்கு சென்றார்கள். அங்கு அறையில் தங்கியிருந்தபோது, சந்தோஷமான உணர்வில் எப்போதும் தாங்கள் பார்த்து மகிழ, தங்கள் உறவை படம்பிடித்திருக்கிறார்கள். அதை லப்டொப்பில் போட்டு பார்த்து மகிழ்ந்திருக்கிறார்கள்.
திடீரென்று லப்டொப் பழுதாகிவிட அந்தப் படத்தை தங்களுக்கு தெரிந்த விதத்தில் அழித்துவிட்டு திருத்தக் கொடுத்திருக்கிறார்கள். ஆனால், திருத்தியவர் அழித்த படங்களை மீண்டும் எடுத்துப்பார்த்ததோடு அதை தன் நண்பர்களுக்கும் அனுப்பிவைத்திருக்கிறார். அதெல்லாம் இந்த தம்பதிக்கு தெரிந்தபோது மிகவும் அதிர்ந்துபோனார்கள். அவர்கள் மனநிலை பாதிக்கப்பட்டது.
திருமணமான இன்னொரு பெண் என்னை சந்திக்க வந்திருந்தார். அவருக்கு திருமணமாகி நான்கு ஆண்டுகள் ஆகியிருக்கின்றன. ஒரு குழந்தையும் இருக்கிறது. இப்போது கணவருக்கு இன்னொரு பெண்ணோடு தொடர்பு இருப்பது உறுதியாகிவிட்டதால் அவரிடமிருந்து விவாகரத்து பெற விரும்புகிறார். ஆனால், திருமணமான புதிதில் இருவரும் இணைந்திருந்த படுக்கை அறைக்காட்சிகள் அனைத்தையும் அவள் சம்மதத்தோடு கணவர் படம்பிடித்திருக்கிறார். அவள் என்னிடம் "நான் விவாகரத்து பெற்ற பின்பு எதிர்காலத்தில் இன்னொரு திருமணம் செய்தால் அந்தப் பழைய அந்தரங்க காட்சிகளை கணவர் வெளியிட்டுவிடுவாரோ என்று பயமாக இருக்கிறது' என்றார். பெண்களால் கணவரையும் நம்ப முடிவதில்லை. காதலரையும் நம்ப முடியவில்லை. அதனால் அவர்கள் அந்தரங்கத்தை படம்பிடிக்க அனுமதிக்காமல் இருப்பதே நல்லது.
காதலில் ஈடுபடும் பெண்கள் தங்கள் அந்தரங்கம் படமாவதை எப்படி தடுக்க வேண்டும்? என்று பார்ப்போம்.
ஆண்கள் முதலில் நட்பாகப்பழகுவார்கள். பின்பு அவள் மீது தனிப்பட்ட முறையில் கவனம் செலுத்தி உணர்வு ரீதியாக அவளை அணுகுவார்கள். அவள் மீது மிகுந்த அக்கறை இருப்பதுபோல் காட்டி அவளை வசப்படுத்தி காதலிப்பார்கள்.
காதல் சரி வந்ததும் சினிமா, கடற்கரை என்று சுற்றுவார்கள். பின்பு அவளை ஆபாசப் படங்களைப் பார்க்க அழைப்பார்கள். அப்போதே பெண்கள் உஷாராகிவிட வேண்டும். அதற்கு சம்மதித்தால் அடுத்த கட்டம், உடலுறவு பின்பு அதை படம் எடுத்தல் என்ற நிலைக்கு போய்விடும். படம் பிடிப்பதில் ஒரு காதலன் வெற்றி பெற்றுவிட்டால் அன்றே அவளது நிம்மதி' எதிர்காலம் எல்லாம் கேள்விக்குறியாகிவிடும்.
இதைத் தடுப்பதில் அம்மாக்களின் பங்கு முக்கியமானது. மகள்களிடம் அவர்கள் மனம் விட்டுப்பேச வேண்டும். பெற்றோர் இருவரும் தினமும் தங்களுக்கு வெளி இடங்களில் கிடைத்த அனுபவங்களை மகளிடம் சொல்ல வேண்டும். அப்போது அவள் தனக்கு ஏற்பட்ட அனுபவங்களை சொல்வாள். இப்படிப்பட்ட நெருக்கமான உறவை பெற்றோர் ஏற்படுத்திக்கொண்டால் மகள்கள் அடுத்தவர்களிடம் அன்பையும் நட்பையும் எதிர்பார்த்து இப்படிப்பட்ட ஆபத்தில் சிக்கிக்கொள்ளமாட்டார்கள். பெற்றோரும் ஆசிரியர்களும் சமூகமும் இதில் ஒருங்கிணைந்து செயற்பட்டால் அந்தரங்கம் படமாகும் அபாயத்தைக் குறைக்கலாம்...
Post a Comment