உலகம் எங்கே செல்கிறது..?
நாய் கழிவில் இருந்து மின்சாரம் தயாரிக்க உள்ளதாக இங்கிலாந்தை சேர்ந்தவர் தெரிவித்துள்ளார். இங்கிலாந்தை சேர்ந்தவர் கேரி டௌனி (41). மரபு சாரா எரிசக்தி உற்பத்தி பற்றி பல வகைகளில் யோசித்து நாய் கழிவில் இருந்து மின்சாரம் தயாரிக்க முடிவெடுத்துள்ளார் கேரி.
இதற்காக நார்த்வேல்ஸ் ஃப்ளின்ட்ஷயர் பகுதியில் பிரத்யேக நாய் கழிவு சேகரிப்பு நிலையங்களை அமைக்கவும் திட்டமிட்டுள்ளார். அனரோபிக் டைஜஷன் முறையில் நாய் கழிவில் இருந்து மின்சாரம் தயாரிக்க உள்ளதாக கேரி குழுவினர் தெரிவித்துள்ளனர். முதல் முயற்சியாக இந்த முறையில் உற்பத்தி செய்யப்படும் மின்சாரம் தெரு விளக்குகள் எரிய பயன்படுத்தப்படும் என்றும் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து கேரி கூறுகை யில், நாள் ஒன்றுக்கு 4 டன் நாய் கழிவுகளை சேகரித்து அதில் இருந்து மின்சாரம் தயாரிக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது. சேகரிக்கப்படும் கழிவுகளுடன் நுண்ணியிரிகள் (மைக்ரோ ஆர்கனிசம்ஸ்) வினை புரியும். அனரோபிக் டைஜஷன் முறையில் இருக்கும் இந்த செயல்பாட்டில் இருந்து மின்சாரம் உற்பத்தி செய்யப்படும் என்கிறார். இந்த முறையில் எதிர்பார்த்த வெற்றி கிடைக்கும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ள இக்குழுவினர் இதன் மூலம் உலகம் முழுவதும் நிலவும் மின் பற்றாக்குறையை சீர் செய்யலாம் என்று தெரிவித்துள்ளனர்.
Post a Comment