Header Ads



அரசியல் வாதிகளே தம்புள்ள பள்ளிவாசல் பிரச்சினைக்கு காரணம் - புதுக்கதை சொல்லும் மஹிந்த


தம்புள்ள பள்ளிவாசல் பிரச்சினைக்கு விரைவில் சுமுகமான தீர்வு காணப்படுமென ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ உறுதியளித்துள்ளார். மாத்தளை மாநகர பிதா முஹமட் ஹில்மி கரீம் கடந்த ஞாயிற்றுக்கிழமை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவை சந்தித்து தம்புள்ள பள்ளிவாசல் விவகாரம் தொடர்பாக கலந்துரையாடிய போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ மேலும் தெரிவித்துள்ளதாவது,

மாத்தளை மாவட்டத்திலுள்ள இரண்டு அரசியல் வாதிகளுக்கிடையில் ஏற்பட்ட தனிப்பட்ட பிரச்சினையே தம்புள்ள பள்ளிவாசல் வரை சென்றுள்ளது.

கடந்த மாதம் 19 ஆம் திகதி இரவு எனக்கு கிடைத்த தொலைபேசி அழைப்புகளை அடுத்து உடனடியாக பொலிஸ் மா அதிபர், பிரதி பொலிஸ் மா அதிபர் ,சிரேஷ்ட, பொலிஸ் அத்தியட்சகர் ஆகியோருடன் தொடர்பு கொண்டு விஷேட அதிரடிப் படையினரின் சேவையைப் பெற்றுக் கொண்டதன் மூலம் மறு நாள் வெள்ளிக்கிழமை இடம்பெறவிருந்த வன்முறைகளும் தவிர்க்கப்பட்டன.

வதந்திகள் மூலம் இப்பிரச்சினை ஊதிப்பெரிதாக்கப்பட்டு விட்டது. அப்படியில்லாத பட்சத்தில் மிக சுமுகமாகப் பேச்சுவார்த்தை மூலம் இப்பிரச்சினைக்கு தீர்வு காண முடிந்திருக்கும்.

இது விடயமாக கண்டி தலதா மாளிகையின் தியவதனே நிலமே பிரதீப் தேல பண்டார, அஸ்கிரிய மகா நாயகத் தேரர் உட்பட பௌத்த சமய தரப்பினர் பலருடனும் பேசியுள்ளதாக ஜனாதிபதி இச்சந்திப்பின் போது மேலும் தெரிவித்தார்.

6 comments:

  1. Poy sonnaalum poruntha solla vendum !!
    Idiot !!

    ReplyDelete
  2. ஜனாதிபதியவர்களே ,நீங்கள் சகல அதிகாரம்பெற்ற அதிபர்தானே சிறிய விடயத்தை பெரியதனமாக கதைத்து நேர காலங்களை வீணடிக்காமல் ,வெசாக் முடிய ரங்கிரி விஹாரா தேரரை அழைத்து விடயத்தை ஒரு சில நிமிடங்களில் பேசி முடித்து நீங்கள் தான் அதி உயர் தலைவர் என்று நிருபியுங்கள்.வளைந்து ,வளைந்து வாகனம் ஓட்டுவது மாத்திரம் உங்கள் கெட்டித்தனமில்லை.வளைந்து இருக்கும் தேரரின் மனதை நேராக்க முயற்சி செய்யுங்கள் .முஸ்லீம்கள் எந்த நாட்டில் வாழ்கிறோமோ அந்த நாட்டிற்க்கு விசுவாசமாகவே இருப்போம் ,பழைய சரித்திரங்களை புரட்டிப்பாருங்கள் .
    ஒரு நாட்டின் தலைவர் இன ,மத ,மொழி வேறுபாடின்றி ஆட்சி செய்வாராகில் முஸ்லிமாக இருந்தால் இம்மை ,மறுமையிலும் முஸ்லிம் அல்லாதவராக இருந்தால் இவ்வுலகில் அதற்குரிய நன்மைகளைப் பெற்றுக்கொள்வார்கள் .இஸ்லாத்தைப் பார்த்து தேரர் மட்டுமல்ல முழு உலகமே அதிர்ச்சியுடனும் ,ஆச்சரியத்துடனும் பார்த்துக்கொண்டுதான்
    இருக்கிறது .முழு உலகமும் ஒரு கொடியின் கீழ் வரும் காலம் வெகு தொலைவில் இல்லை.அதற்காக நாங்கள் ஆயுதம் தூக்கி போராட போகிறோம் என்று அர்த்தமில்லை .இதுதான் அல்லாஹ்வின் ஏற்பாடு .உலக அழிவுக்கு முன் முழு உலகமும் இஸ்லாத்திற்குள் வர நாம் அனைவரும் உலக மக்களுக்கு தஹ்வா செய்வோம் .
    Meeraan

    ReplyDelete
  3. எப்படி இப்படியெல்லாம் யோசிக்கமுடியுது ரூம் போட்டு யோசிப்பாங்களோ
    ஆக எல்லாம் பெரியவருக்கு முன்கூட்டிய தெரிந்து இருக்கு

    ReplyDelete
  4. கண்டி தலதா மளிகை தேரை, இன்னும் கொஞ்ச மொட்டைகளுடன் நம்ம ஜனாதிபதி ரூம் போட்டி யோசித்து இருக்காரு...

    ReplyDelete
  5. viraivil aapppuuu kidaikum boss
    wait & seeee

    ReplyDelete
  6. evvalavu sinna case ithu atha thalatha malihaikku poi yosipparamam
    mullu athikaram petra president
    parunga comediya

    ReplyDelete

Powered by Blogger.