Header Ads



கிறீஸ் நாட்டு நகைக்கடையில் களவாடி, அதனை இலங்கைகக்கு அனுப்பியோர்..!

TM

இலத்திரனியல் பொருட்களுக்குள் மறைத்துவைக்கப்பட்டு கிறீஸ் நாட்டிலிருந்து கொழும்புக்கு கப்பல் மூலம் அனுப்பப்பட்ட ஆயிரக்கணக்கான இரத்தினக்கற்கள் மற்றும் தங்க நகைகளை சுங்கத் திணைக்களத்தினர் நேற்று கைப்பற்றியுள்ளனர்.

 குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கூடாக இன்டர்போல் அதிகாரிகள் வழங்கிய தகவல் மூலம் இவை கண்டுபிடிக்கப்பட்டன. பல மில்லியன் ரூபா பெறுமதியான தங்க மோதிரங்கள், வளையல்கள், சங்கிலிகள் மற்றும் இரத்தினங்கள் சுங்க அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டன.

கிறீஸில் பணியாற்றிய இலங்கைத் தம்பதியொன்றினால் இவை அனுப்பப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேற்படி கணவனும் மனைவியும் கொழும்பில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

 இக்கணவர் கிறீஸ் தலைநகர் ஏதென்ஸில் நகையகமொன்றில் பல வருடங்கள் பணியாற்றியவராவர். அவர் அக்கடையின் சிரேஷ்ட உத்தியோகஸ்தர் என்பதால் நூற்றுக்கணக்கான நகைப்பெட்டிகள் அவரின் பொறுப்பில் வைக்கப்பட்டிருந்தன.

கடந்த மாத முற்பகுதியில் சுமார் ஒரு வார காலம் இத்ததம்பதியினர் காணாமல்போயிருந்தமை குறித்து ஏதென்ஸ் பொலிஸாருக்கு மேற்படி நகை விற்பனை நிலையத்தினர் முறைப்பாடு செய்திருந்தனர்.

 சுங்கப்பணிப்பாளர் ரஞ்சன் கனகசபை தலைமையிலான அதிகாரிகள் இந்நகைகளையும் இரத்தினங்களையும் கண்டுபிடித்தனர். விசாரணைகளுக்காக இந்நகைகளை தம்மிடம் ஒப்படைக்குமாறு கோரும் நீதிமன்ற உத்தரவை குற்றப்புலனாய்வுப் பிரிவினர் பெற்றுள்ளனர்.

1 comment:

  1. நம்பிக்கை துரோகத்திற்கு சரியான தண்டனை வழங்க வேண்டும் .இலங்கையில் அது நடக்குமா ?
    Meeran

    ReplyDelete

Powered by Blogger.