யாழ்ப்பாணத்தில் துப்பாக்கி சூடு - இரு இராணுவத்தினர் பலி - தனிப்பட்ட பகையே காரணம்
யாழ். நகரிலுள்ள இராணுவ பாதுகாப்புச் சோதனைச் சாவடியொன்றில் இன்று வெள்ளிக்கிழமை காலை பாதுகாப்புக் கடமையில் ஈடுபட்டிருந்த இரண்டு இராணுவ வீரர்கள் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி பலியாகியுள்ளனர்.
இந்த இரு இராணுவ வீரர்களும் பாதுகாப்புக் கடமையில் ஈடுபட்டிருந்தபோது, ஒரு இராணுவ வீரர் மீது மற்றுமொரு இராணுவ வீரர் துப்பாக்கிச் சூடு மேற்கொண்டுள்ளார். இதனைத் தொடர்ந்து துப்பாக்கிச் சூடு மேற்கொண்ட இராணுவ வீரர் தன்னைத்தானே சுட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
தனிப்பட்ட பிரச்சினையே இதற்கான காரணமென இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் ஆர்.வணிகசூரிய தெரிவித்தார்.
Post a Comment