Header Ads



அவுஸ்திரேலிய அமைச்சருடன் ரவூப் ஹக்கீம் சந்திப்பு

நாடுகளுக்கிடையே சட்ட விரோதமாக ஆட்களை கொண்டு செல்லும் குற்றச்செயலை முறியடிப்பதற்கு அவுஸ்திரேலியாவும் இலங்கையும் கூட்டாக மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் பற்றிய முக்கிய கலந்துரையாடலொன்று நீதியமைச்சரும், ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவருமான ரவப் ஹக்கீம், அவுஸ்திரேலிய குடிவரவு குடியகழ்வு அமைச்சர் கிறிஸ் போவன் ஆகியோருக்கிடையில் இடம்பெற்றுள்ளது.

இன்று முற்பகல் அமைச்சர் ஹக்கீமின் இல்லத்தில் நடைபெற்ற இக் கலந்துரையாடலில் இலங்கைக்கான அவுஸ்திரேலிய தூதுவர் ரொபின் மூடி உட்பட அவுஸ்திரேலிய உயர் அதிகாரிகளும் பங்குபற்றினர்.

No comments

Powered by Blogger.