தலிபான் போராளிகளை அடக்கமுடியாத அமெரிக்கா பாகிஸ்தானை குற்றம் சுமத்துகிறதாம்
பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளில் தோல்வி அடைந்துள்ள அமெரிக்கா, அதற்காக பாகிஸ்தானை பலிகடா ஆக்கிவருகிறது என்று பாகிஸ்தான் லெப்டினன்ட் ஜெனரல் காலித் ரப்பானி பகிரங்கமாகக் குற்றம்சாட்டியுள்ளார்.
ஆப்கானிஸ்தான் - பாகிஸ்தான் எல்லையில் உள்ள அனைத்து பயங்கரவாத முகாம்களையும் பாகிஸ்தான் அழிக்க வேண்டும் என்று அமெரிக்கா எதிர்பார்க்கக் கூடாது என்றும் அவர் கூறியுள்ளார்.பாகிஸ்தான் எல்லையில் மேற்கொள்ளப்படும் பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளுக்கான தலைமை ராணுவ அதிகாரியான காலித் ரப்பானி இது தொடர்பாக மேலும் கூறியுள்ளது,
ஆப்கானிஸ்தானில் பயங்கரவாதிகளை ஒடுக்கும் நடவடிக்கைகளில் அமெரிக்காவால் வெற்றிபெற முடியவில்லை. ஆப்கானிஸ்தானில் இப்போதும் ஆயிரக்கணக்கான தலிபான்கள் உள்ளனர்.
அவர்களை அடக்க முடியாத அமெரிக்கா, பாகிஸ்தானை நோக்கி குரலை உயர்த்தி குற்றம்சாட்டி வருகிறது. பயங்கரவாதிகளுக்கு எதிராக பாகிஸ்தான் கடும் நடவடிக்கை எடுக்கவில்லை என்பது அவர்களின் குற்றச்சாட்டாக உள்ளது. மற்றவர்களை குற்றம் கூறுவதுதான் அமெரிக்காவின் வழக்கம்.
ஆப்கானிஸ்தானில் முழுமையாக அமைதியை ஏற்படுத்த அமெரிக்காவும் நேட்டோ நாடுகளும் முயற்சி மேற்கொண்டால், பாகிஸ்தான் எல்லைப் பகுதியிலும் அமைதி திரும்பிவிடும் என்றார் அவர்.
Post a Comment