ஜெனீவாவில் பிரேணையா? - இலங்கை முஸ்லிம்களை பாதாளத்தில் தள்ளும் - எச்சரிக்கிறார் அமீன்
தம்புள்ள பள்ளிவாசல் தாக்குதலையடுத்து இச்சம்பவத்திற்கு எதிராக சில தனிநபர்களும், அவை சார்ந்து இயங்கும் அமைப்புக்களும் ஜெனீவாவில் பிரேணையொன்றை கொண்டுவருவுதாக ஊடகங்கள தகவல் வெளியிட்டிருப்பது இலங்கை முஸ்லிம்களுக்கு மிகப்பெரும் நெருக்கடியை ஏற்படுத்தி, அவர்களை பாதாளத்திற்கு தள்ளிவிடுமென முஸ்லிம் மீடியா போரம் மற்றும் முஸ்லிம் கவுன்சில் தலைவரும், நவமணி பத்திரிகையின் பிரமத ஆசிரியருமான என்.எம்.அமீன் தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் மேலும் குறிப்பிட்டதாவது,
இலங்கை வாழ் முஸ்லிம்கள் சிங்கவர்களுக்கு மத்தியிலேயே வாழ்கின்றனர். ஒரு முஸ்லிம் கிராமத்தை சுற்றி பல சிங்கள கிராமங்கள் அல்லது நகரங்கள் உள்ளன. பல்வேறு விடயங்களிலும் இலங்கை முஸ்லிம் சமூகம் சிங்களவர்களையே நம்பியுள்ளது. இரு சமூகங்களுக்குமிடையே முரண்பாடுகுள் காணப்படுகிற போதிலும் இந்த முரண்பாட்டை ஊதிப் பெருபிப்பதில் எவரும் ஈடுபடக்கூடாது.
தம்புள்ள பள்ளி தாக்குதலுக்கு எதிராக ஜெனீவாவில் சிலர் பிரேணை கொண்டுவரவுள்ளதாக சில ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன. (யாழ் முஸ்லிம் இணையம் அல்ல) எந்த அடிப்படையில், இந்த ஆதாரத்தைக்கொண்டு, எவருடன் கலந்துரையாடி இவ்வாறான முயற்சி மேற்கொள்ளப்பட்டது என்பது புரியவில்லை.
இந்த செய்தியின் தாக்கம் தற்போது பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இன்று வியாழக்கிழமை, 3 ஆம் திகதி வெளியாகியுள்ள சிங்கள லக்பிம பத்திரிகை ஜெனீவாவில் முஸ்லிம்கள் பிரேணை கொண்டுவரப்போகிறார்கள் என்ற செய்தியை பிரதானப்படுத்தியுள்ளது. இலங்கை முஸ்லிம்கள் குறித்து அப்பத்திரிகை கேள்வியெழுப்பியுள்ளது. லக்பிம பத்திரிகையில் இச்செய்தி சிங்கள சமூகம் மற்றும் ஆடசியாளர்களிடத்தில் முஸ்லிம் சமூகத்திற்கெதிரான உணர்வலைகைள தோற்றுவிக்கும். இதனால் நமது முஸ்லிம் சமூகுமே பாதிப்பை ஏதிர்கொள்ளப்போகிறது.
நாட்டு நலனை முதன்மைப்படுத்தியே முஸ்லிம்கள் செயற்படவேண்டும். சிங்களவர்களின் அநேகர் முஸ்லிம்கள் விடயத்தில் சிறந்த மனப்பான்மை கொண்டுள்ளனர். ஜெனீவாவில் தம்புள்ள பள்ளி தாக்குதலுக்கு எதிராக பிரேணை கொண்டுவருவது என்ற தகவலானது ஒட்டுமொத்த சிங்களவர்களையும் இலங்கை முஸ்லிம்களுக்கு எதிராக திசைதிருப்பிவிட வழிவகுக்கும்.
எனவே வெளிநாடுகளில் உள்ள இலங்கை முஸ்லிம் தனிநபர்களாயினும் சரி அல்லது அவர்கள் சார்பில் இயங்கும் அமைப்புக்ளாயினும் சரி தம்புள்ள பள்ளிவாசல் தொடர்பில் தாம் மேற்கொள்ளும் அத்தனை நகர்வுகள் பற்றியும் அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா சபை மற்று முஸ்லிம் கவன்சிலின் வழிகாட்டுதலில் செயற்படுவுது சிறந்தது. ஆக்ரோசமாக செயற்படுவது, அதுதொடர்பில் ஊடகங்களுக்கு செய்தி அனுப்புவது, அவற்றை ஊடகங்கள் ஆராய்ந்து பார்க்காமல் பிரசுரிப்பது போன்ற செயற்படுகளின் பாதிப்புகள் எல்லாம் இறுதியில் இலங்கையில் வாழும் முஸ்லிம் சமூகத்தையே பீடித்துக்கொள்கிறது.
இங்கு முஸ்லிம் சார்பு இணைய ஊடகங்களுக்கும் பெரிய கடமைப்பாடு உள்ளது. அதாவது தற்போது அநேக ஊடகங்கள் கண்காணிக்கப்படுகின்றன. வெளியிடும் செய்திகள் குறித்து இந்த முஸ்லிம் சார்பு ஊடகங்கள் விழிப்புடன் செயற்படுவது அவசியம். ஜெனீவாவில் முஸ்லிம்கள் பிரேணை கொண்டுவரவிருக்கிறார்கள் என்ற செய்தி தற்போது ஏற்படுத்தியுள்ள பாதிப்புகள் குறித்து முஸ்லிம் ஊடகங்கள் சிந்திக்கவேண்டும். இதுபோன்ற செய்திகள் நமது முஸ்லிம் சமூகத்தை சிக்கலில் மாட்டிவிடுகின்றன.
எனவே தயவுசெய்து தனிநபர்கள் மற்றும் அமைப்புக்கள் அனுப்பும் செய்திகள் குறித்து பலமுறை சிந்தியுங்கள். இலங்கை முஸ்லிம் சமூகத்தை இக்கட்டில் தள்ளும் செய்திகள் பதிவிடுவதை நிறுத்துங்கள். இலங்கை முஸ்லிம் சமூக நலனில் ஆர்வம் கொண்ட சகலரும் இவ்வியடம் தொடர்பில் கவனம் செலுத்துவர்கள் எனவும் என்.எம். அமீன் மேலும் குறிப்பிட்டார்.
விரலுக்குத் தக்கன வீக்கம் வேண்டும் என்பார்கள்.
ReplyDeleteபிரச்சினையை அதன் உரிய முறைப்படி, உரிய வடிவில் அணுக வேண்டும்.
அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு. ஆகவே அளவுக்கு மீறி விடயத்தை ஊதிப் பெரிதாக்க வேண்டாம்.
அதற்காக மூடி மறைக்கவும் தேவையில்லை. உள்ளதை உள்ளபடி பேசுவோம்.
துள்ளுன மாடு பொதி சுமக்கும் என்பதற்கமைய, அளவுக்கு அதிகம் துள்ளி, பிரச்சினையை விலை கொடுத்து
வாங்க முயல வேண்டாம். பள்ளிவாசல் தாக்கப் பட்டது என்பதற்கும், பள்ளிவாசல் தகர்க்கப் பட்டது என்பதற்கும்
இடையில் உள்ள வேறுபாட்டை புரிந்து கொள்ள வேண்டும்.
புலி சார்பு தேச விரோத சக்திகள் இதனை சந்தர்ப்பமாக பயன்படுத்தி, புலிகள் முஸ்லீம்களுக்கு
எந்த கொடுமையும் செய்யாதது போலவும்,
இலங்கை முஸ்லீம்களுக்கு நடந்த மிகப் பெரும் கொடுமையே தம்புள்ளை விவகாரம்தான் என்பது போலவும் நடந்து கொள்கின்றனர்.
புலி சார்பு தேச விரோத சக்திகளுக்கு முஸ்லீம்கள் குறித்து கிஞ்சித்தும் அக்கறை இல்லை. இவர்களின் நோக்கம் எல்லாம்
இலங்கை அரசை இக்கட்டில் தள்ளுவது, இலங்கைக்கி முடித்த வரை அவப்பெயரை பெற்றுக் கொடுப்பது, அடுத்து சிங்களவர் முஸ்லீம்கள்
இடையேயான நல்லுறவை சிதைப்பது என்பதாகும். முஸ்லீம்கள் விவேகமாக காரியமாற்ற வேண்டும்.
ippa maddum ennavam...adaki vasikkaththan vendum anaal overaha adakki vasikkath thevai illai.
ReplyDeleteசரியாகச் சொன்னீர்கள்!
ReplyDeleteஇப்படியான கோணத்தில் எல்லாம்
இவ் விடயத்தை கொண்டு செல்வதற்கு பற்பல
சக்திகள் காத்துக் கிடப்பதைக் கூட அறிய முடியா
மல்ப் போனதின் மர்மம்தான் என்ன?
தாக்கப்பட்டதற்கும் தகர்க்கப்பட்டதற்கும் வித்தியா
சம்தான் தெரியாமல் உம்மாக்களை கடுப்பேற்றியதன்
காரணம்தான் என்ன?
மாமியார் உடைத்தால் பொன் குடம்
மருமகள் உடைத்தால் மண் குடம்
என்ற போக்கைத்தானே நீங்கள் எல்லாம்
கடைப்பிடித்தீர்கள்?!
எங்கோ போக இருந்த களநிலவரத்தை தன்
னுடைய ஆளுமையைக் கொண்டு தணித்து,
இன்று இது விடயத்தில் நீங்கள் சுமுகமாக
பயணிப்பதற்கு வழி சமைத்துத் தந்தவனுக்கு
நீங்கள் கொடுத்த பரிசை மனசாட்சியோடு
சிந்தித்து பாருங்கள்!
அப்போது, தீர்க்கதரிசனமும் முடிவெடுக்கும்
திறனும் எங்கிருக்கின்றது என்பதைக் காண்பீர்கள்.
குதைபியா உடன்படிக்கை பற்றி எல்லாம் இனித்
தான் பேச ஆரம்பிப்பீபார். [விடயம் கையை விட்டு
நழுவப் பார்கின்றதல்லவா?!]
எல்லாம் வல்ல அல்லாஹ் அனைவர்களது உள்ளங்
களையும் உற்று நோக்கியவனாக நன்கறிந்தவனாக
உள்ளான்.
அல்லாஹ் போதுமானவன்!
அல்லாஹு அக்பர்!
பௌத்த மதகுருமாரின் தலைமையில் மேற்கொள்ளப்பட்ட குறித்த நிகழ்வானது மிக முதன்மையாக இது ஒரு அடிப்படை மனித உரிமை மீறல் நிகழ்வாகும்...
ReplyDeleteஎம் இருப்பை இம்மண்ணை விட்டும் இல்லாதொழிக்க நினைத்தால் அது வெரும் பகற்கனவு தான் என்பதை இனத்துவேஷ விஷமிகளின் செவிகளுக்கு உரத்துச் சொல்கிறோம்!
அடக்கு முறைக்கு உட்படுகின்ற எந்த வொரு சமூகமும் சர்வதேச சமூகத்தின் தயவை நாடுவதனை எவராலும் தடுத்து நிறுத்த முடியாது!!!!
அடக்கு முறைக்கு உட்படுகின்ற எந்த வொரு சமூகமும் சர்வதேச சமூகத்தின் தயவை நாடுவதனை எவராலும் தடுத்து நிறுத்த முடியாது!!!!
ReplyDeleteதேசிய கொள்கையாக பன்முக கலாச்சாரம், கூட்டிருப்பு மற்றும் நல்லிணக்கம் என்பனவற்றை உருவாக்கும் பிரதானபாதையை அமைப்பதற்காக யுனஸ்கோவை உதவிக்கு அழைக்கலாம்.,2001ம் ஆண்டு தென்னாபிரிக்காவின் டர்பன் நகரில் இனவாதத்துக்கு எதிரான ஐக்கிய நாடுகள் சபையின் உலக மாநாடு உறுதிநடாத்தப்பட்ட தாக்குதலை அரசும் அவர்களது படைகளும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தமையைக் கண்டித்து ...
ReplyDeleteஜனாப் அமீனின் அறிவுறுத்தல் வரவேற்கத்தக்கது முஸ்லிம்களின் பிரச்சினையை ஜெனிவாவில்தான் தீர்க்கமுடியும் என்றால் ஏன் இவ்வளவு நாட்களும் பாலஸ்தீன பிரச்சினை முடிவுக்கு வராமல் உள்ளது கத்தி எடுத்தவன் எல்லாரும் சண்டைக்காரன் மாதிரி இப்ப வெப் சைடு வைச்சிருக்கிறவன் எல்லோரும் நிருபர்கள். நல்லதையே நினைப்போம் நல்லதே நடக்கும்.அல்லாஹ் யாவற்றையும் நன்கு அறிந்தவன் .
ReplyDelete